இன்னுமாட நீங்க திருத்தல..தகுதியே இல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி.20 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த 3 வீரர்கள்..
வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, விண்டீஸ் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வழக்கம் போல், ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் விண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. அதே வேளையில், டி.20 தொடருக்கான இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியின் கீழ் விளையாட உள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில், ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் போன்ற இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றிருந்தாலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங், ருத்துராஜ் கெய்க்வாட் போன்ற சில திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால் கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடிய ஆவேஷ் கான் உள்ளிட்ட ஒரு சில வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது ரசிகர்கள் பெரும்பாலானவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தேவையே இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று வீரர்கள் குறித்து இங்கு காண்போம்.
ஆவேஷ் கான்.
இந்த வரிசையில் முதலிடத்தை பிடிப்பவர் இந்திய அணியின் இளம் வேகம் பந்துவீச்சாளர் ஆவேஷ் கான், 2022 ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆசிய கோப்பையில் இடம் பிடித்த ஆவேஷ் கான், ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓவரில் 50+ ரன்கள் கொடுத்து விமர்சனத்தை பெற்றார்.
மேலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் இவர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. குறிப்பாக நடந்து முடிந்த 2023 ஐபிஎல் தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆவேஷ் கான், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ளது ரசிகர்கள் உட்பட முன்னாள் வீரர்கள் பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.