விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி ! கடந்த 10 ஆண்டுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர் யார் ? சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் விமர்சனம் ! 1

விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி ! கடந்த 10 ஆண்டுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர் யார் ? சுனில் கவாஸ்கர் மேத்யூ ஹைடன் விமர்சனம் !

மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக 2003ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை விளையாடியவர். குறிப்பாக 2010ஆம் ஆண்டு கால கட்டத்தில் இருந்து அவர் மிகப்பெரிய பல சாதனைகள் படைத்து இருக்கிறார். அதே நேரத்தில் 2009 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை விளையாடிக் கொண்டிருப்பது விராட் கோலி.

மகேந்திர சிங் தோனி மூன்று வகையான உலகக் கோப்பைகளை வென்று பல சாதனைகள் படைத்திருக்கிறார். விராட் கோலி இந்த அணியால் செய்ய முடியாத பல தொடர்களை வென்று கொடுத்திருக்கிறார். அதனைத் தாண்டி சமகாலத்தில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் இந்த இருவரில் யார் மிகச்சிறந்த வீரர் என்று பேசியிருக்கின்றனர் சுனில் கவாஸ்கர் மற்றும் மேத்யூ ஹைடன்.

விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி ! கடந்த 10 ஆண்டுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர் யார் ? சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் விமர்சனம் ! 2

இது குறித்து கவாஸ்கர் கூறுகையில் “இந்திய அணியில் 2008 ஆம் ஆண்டு அறிமுகமான விராட் கோலி 86 டெஸ்ட், 251 ஒருநாள் போட்டி, 84 டி20 போட்டிகளில் 22 ஆயிரம் ரன்கள் குவித்திருக்கிறார். அதிவேகமாக 12 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையை எடுத்த விராட் கோலி சச்சினின் சாதனையை முறியடித்து விட்டார்.

விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி ! கடந்த 10 ஆண்டுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர் யார் ? சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் விமர்சனம் ! 3

12,000 ரன்களை எடுக்க விராட் கோலிக்கு 242 ஆட்டம்தான் தேவைப்பட்டிருக்கிறது. என்னை பொறுத்தவரையில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் என்று கூறினால் அது விராட்கோலி தான். இந்திய அணி கடந்த பல ஆண்டுகளில் வெற்றி பெற்ற போட்டிகளை எடுத்துப்பார்த்தால் அதில் விராட் கோலியின் பங்கு பெரிதாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி ! கடந்த 10 ஆண்டுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர் யார் ? சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் விமர்சனம் ! 4

இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹைடன் கூறுகையில் என்னைக் கேட்டால் கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் யார் என்றால் அது தோனி. தோனி தலைமையில் இந்திய அணி உலக கோப்பை தொடர் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆகியவற்றை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் ஏராளமான கிரிக்கெட் தொடரில் விளையாடி இருக்கிறோம். ஆனால் உலகக் கோப்பை தொடருக்கு தயாராகி வரும் போதுதான் ஒரு அணிக்கு வலிமையான தலைவர் தேவைப்படும். ஆனால் அதனையும் தாண்டி மகேந்திரசிங் தோனி ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் இருந்தார்” என்று தெரிவித்திருக்கிறார் மேத்யூ ஹைடன்.

விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி ! கடந்த 10 ஆண்டுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கிரிக்கெட் வீரர் யார் ? சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் விமர்சனம் ! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *