ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவுக்கு ஜாக்பாட்... கில், சூரியகுமார் யாதவ் முன்னேற்றம்.. இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப்பட்டியல் வெளியானது! - பிசிசிஐ அறிவிப்பு! 1

இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தபட்டியலை இறுதிசெய்து வெளியிட்டுள்ளது பிசிசிஐ. கடந்த வருடம் 27 வீரர்கள், ஆனால் இந்த வருடம் 26 வீரர்கள் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பிசிசிஐ இந்திய வீரர்களுக்கான ஒப்பந்தத்தை நான்கு பிரிவுகளின் அடிப்படையில் வருடாவருடம் செய்து வருகிறது. ஏ-பிளஸ் பிரிவில் ஒப்பந்தம் செய்யப்படும் வீரர்களுக்கு 7 கோடியும், ஏ பிரிவு வீரர்களுக்கு 5 கோடியும், பி பிரிவு வீரர்களுக்கு 3 கோடியும், கடைசியாக சி பிரிவு வீரர்களுக்கு ஒரு கோடியும் ஒப்பந்தத் தொகையாக கொடுக்கப்படும்.

ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவுக்கு ஜாக்பாட்... கில், சூரியகுமார் யாதவ் முன்னேற்றம்.. இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப்பட்டியல் வெளியானது! - பிசிசிஐ அறிவிப்பு! 2
Bcci

2022ஆம் ஆண்டு மொத்தம் 27 வீரர்களை பிசிசிஐ ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த வருடம் 26 வீரர்களை ஒப்பந்தம் செய்திருக்கிறது. ஏ-பிளஸ் பிரிவில் நான்கு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர். ஏ பிரிவில் 5 வீரர்கள், பி பிரிவில் ஆறு வீரர்கள் மற்றும் சி பிரிவில் 11 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஒப்பந்தத்தில் முன்னேற்றம் கண்ட இந்திய வீரர்கள்:

கடந்த வருடம் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த ஜடேஜா இந்த வருடம் ஏ-பிளஸ் பிரிவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பி பிரிவில் இருந்த அக்சர் பட்டேல் ஏ பிரிவிற்கு ஒப்பந்தமாகியுள்ளார். சி பிரிவில் இருந்த ஷுப்மன் கில், சூரியகுமார் யாதவ் ஆகியோர் இந்தாண்டு பி பிரிவிற்கும், ஹர்திக் பாண்டியா நேரடியாக ஏ பிரிவிற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவுக்கு ஜாக்பாட்... கில், சூரியகுமார் யாதவ் முன்னேற்றம்.. இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப்பட்டியல் வெளியானது! - பிசிசிஐ அறிவிப்பு! 3

இஷான் கிஷன், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், அரஷ்தீப் சிங், கேஎஸ் பரத் ஆகியோர் முதல் முறையாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு சி பிரிவு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிரிவு வாரியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்கள்

ஏ- பிளஸ் பிரிவு – விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா.

ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவுக்கு ஜாக்பாட்... கில், சூரியகுமார் யாதவ் முன்னேற்றம்.. இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப்பட்டியல் வெளியானது! - பிசிசிஐ அறிவிப்பு! 4

ஏ பிரிவு – ஹர்திக் பாண்டியா, ஆர் அஸ்வின், முகமது சமி, ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல்

பி பிரிவு – புஜாரா, கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், சூரியகுமார் யாதவ், சுப்மன் கில்

ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவுக்கு ஜாக்பாட்... கில், சூரியகுமார் யாதவ் முன்னேற்றம்.. இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப்பட்டியல் வெளியானது! - பிசிசிஐ அறிவிப்பு! 5

சி பிரிவு – உமேஷ் யாதவ், ஷிக்கர் தவான், சர்துல் தாக்கூர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், தீபக் ஹூடா, யுஸ்வேந்திர சகல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், கேஎஸ் பரத்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *