சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் அணிக்கு திரும்பியுள்ளார். இவர் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறார்.
லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நடைபெறும் பத்தாவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங் தேர்வு செய்தார்.

சர்வதேச போட்டிகள் இருந்ததால், முதல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னணி வீரர்களான எய்டன் மார்க்ரம் மார்க்கோ ஜான்சன் மற்றும் ஹென்றி கிளாஸன் ஆகியோர் இடம் பெறவில்லை. இவர்கள் அணிக்கு திரும்பியுள்ளதால் இன்று பலம் பொருந்தி அணியாக காணப்படுகிறது.
மேலும் முதல் லீக் போட்டியில் சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவியது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இத்தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்பதை பார்ப்போம்.
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை பொறுத்தவரை, இரண்டு லீக் போட்டிகள் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியைப் பெற்றிருக்கிறது. இன்று சொந்த மைதானத்தில் விளையாடுவதால் கூடுதல் பலத்துடன் காணப்படுகிறது.

இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்குகிறது. அதேபோல் லக்னோ அணியும் இரண்டு மாற்றங்களை செய்திருக்கிறது. தீபக் ஹூடா மற்றும் ஆவேஷ் கான் இருவரும் வெளியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங்(கீப்பர்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக், அடில் ரஷித்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன் (கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, அமித் மிஸ்ரா, யாஷ் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், ரவி பிஷ்னாய்