ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
கௌகாத்தி மைதானத்தில் சீசனின் 11ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இதுவரை விளையாடிய இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியை தழுவி மூன்றாவது போட்டிக்கு வந்திருக்கிறது. இதில் வெற்றி பெறும் முனைப்புடனும் இருக்கிறது. அதேநேரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும், கௌகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. மீண்டும் இதே கௌகாத்தி மைதானத்தில் விளையாடுவதால் முன்பு நடந்த தவறை சரிசெய்து வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இன்றைய போட்டியில் 2 அணிகளும் நிறைய மாற்றங்களை செய்து இருக்கின்றன டெல்லி கேப்பிட்டல் சனி நான்கு மாற்றங்களுடன் களம் இறங்குகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு மாற்றங்களுடன் களம் இறங்குகிறது.
இரு அணிகளின் பிளேயிங் லெவனை பின்வருமாறு காண்போம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
டேவிட் வார்னர் (கேப்டன்), மனிஷ் பாண்டே, ரிலீ ரோசோவ், ரோவ்மேன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல் (கீப்பர்), அன்ரிச் நார்ட்ஜே, கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்

ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

விரலில் காயம் ஏற்பட்டு தையல் போட்டுக்கொண்ட ஜோஸ் பட்லர் இன்றைய போட்டியில் இருக்க மாட்டார் என்று பலரும் கணிப்புகளை தெரிவித்து வந்தனர். அவை அனைத்தையும் பொய்யாக்கி இன்றைய பிளேயிங் லெவனில் இடம்பெற்று இருக்கிறார் ஜோஸ் பட்லர்.