அதிர்ச்சி.. பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்சர் இல்லை... சிஎஸ்கே முதலில் பவுலிங்.. சிஎஸ்கே அணியில் 2 முக்கிய மாற்றங்கள், மும்பை அணியில் 1 மாற்றம்; அணியில் யார் யார் மாற்றம்? - விபரம் உள்ளே! 1

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பவுலிங் செய்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் 12ஆவது லீக் போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘எல்-கிளாசிகோ’ என்று அழைக்கப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதிர்ச்சி.. பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்சர் இல்லை... சிஎஸ்கே முதலில் பவுலிங்.. சிஎஸ்கே அணியில் 2 முக்கிய மாற்றங்கள், மும்பை அணியில் 1 மாற்றம்; அணியில் யார் யார் மாற்றம்? - விபரம் உள்ளே! 2

இதுவரை இரண்டு லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒரு தோல்வி மற்றும் ஒரு வெற்றியை பெற்றிருக்கிறது. வெற்றி பெற்ற கையோடு இந்த லீக் போட்டிக்கு வந்திருப்பதால் இதிலும் வெற்றி பெறுவதற்கு முனைப்புடன் இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை, முதல் லீக் போட்டியில் ஆர்சிபி அணியிடம் தோல்வியை தழுவியது. இருப்பினும் இந்த சீசனில் முதல்முறையாக சொந்த மும்பை மைதானத்தில் விளையாடுவதால் வெற்றிபெற்று பலத்தை நிரூபிக்க காத்திருக்கிறது.

சிஎஸ்கே அணி இரண்டு முக்கிய மாற்றங்களை செய்திருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி வெளியில் அமர்த்தப்பட்டு அஜங்கியா ரகானே மற்றும் டிவைன் பிரெட்டோரியஸ் இருவரும் உள்ளே வந்திருக்கின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு முக்கிய மாற்றத்தை செய்திருக்கிறது. ஜோப்ரா ஆர்சர் வெளியில் அமர்த்தப்பட்டு வேறொரு வீரர் உள்ளே எடுத்துவரப்பட்டிருக்கிறார்.

இரு அணிகளின் பிளேயிங் லெவனை பின்வருமாறு காண்போம்.

மும்பை இந்தியன்ஸ்:

ரோகித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், ட்ரிஸ்டன் ஸ்டாப்ஸ், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹரேண்டாப், அர்ஷத் கான்

அதிர்ச்சி.. பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்சர் இல்லை... சிஎஸ்கே முதலில் பவுலிங்.. சிஎஸ்கே அணியில் 2 முக்கிய மாற்றங்கள், மும்பை அணியில் 1 மாற்றம்; அணியில் யார் யார் மாற்றம்? - விபரம் உள்ளே! 3

சென்னை சூப்பர் கிங்ஸ்:

டெவோன் கான்வே, ருத்துராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(கேப்டன்/கீப்பர்), ஷிவம் துபே, டிவைன் பிரெட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, சிசன்டா மகலா

அதிர்ச்சி.. பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்சர் இல்லை... சிஎஸ்கே முதலில் பவுலிங்.. சிஎஸ்கே அணியில் 2 முக்கிய மாற்றங்கள், மும்பை அணியில் 1 மாற்றம்; அணியில் யார் யார் மாற்றம்? - விபரம் உள்ளே! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *