தமிழக வீரருக்கு இடம் கொடுக்காத ஹர்திக் பாண்டியா... குஜராத் அணி முதலில் பேட்டிங்... தரமான பிளேயிங் லெவனுடன் இறங்கும் சஞ்சு சாம்சன்! - இரு அணிகளில் என்னென்ன மாற்றங்கள்? விபரம் உள்ளே! 1

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இரு அணிகளின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? என்பதை கீழே பார்ப்போம்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 23ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக தேர்வு செய்தார்.

தமிழக வீரருக்கு இடம் கொடுக்காத ஹர்திக் பாண்டியா... குஜராத் அணி முதலில் பேட்டிங்... தரமான பிளேயிங் லெவனுடன் இறங்கும் சஞ்சு சாம்சன்! - இரு அணிகளில் என்னென்ன மாற்றங்கள்? விபரம் உள்ளே! 2

குஜராத் டைட்டன்ஸ் அணியை பொருத்தவரை, ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. விஜய் சங்கர் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக அபிநவ் மனோகர் எடுத்துவரப்பட்டிருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை, ஜேசன் ஹோல்டர் இம்முறை வெளியில் அமர்த்தப்பட்டு டிரெண்ட் போல்ட் உள்ளே எடுத்து வரப்பட்டிருக்கிறார்.

இந்த சீசனில் இதுவரை…

இரண்டு அணிகளுமே தலா நான்கு போட்டிகள் விளையாடி மூன்று வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியை பெற்றுள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. குஜராத் அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பெறும். இரண்டு அணிகளுமே தங்களது கடைசி லீக் போட்டியை வெற்றிபெற்று வந்திருப்பதால் பலத்துடன் காணப்படுகிறது குஜராத் அணி அவர்களது சொந்த மைதானத்தில் விளையாடுவதால் இன்னும் பலத்துடன் இருக்கிறது.

தமிழக வீரருக்கு இடம் கொடுக்காத ஹர்திக் பாண்டியா... குஜராத் அணி முதலில் பேட்டிங்... தரமான பிளேயிங் லெவனுடன் இறங்கும் சஞ்சு சாம்சன்! - இரு அணிகளில் என்னென்ன மாற்றங்கள்? விபரம் உள்ளே! 3

இரு அணிகளின் பிளேயிங் லெவன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

குஜராத் டைட்டன்ஸ்:

விருத்திமான் சாஹா (கீப்பர்), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, மோகித் சர்மா

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(கேப்டன்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

தமிழக வீரருக்கு இடம் கொடுக்காத ஹர்திக் பாண்டியா... குஜராத் அணி முதலில் பேட்டிங்... தரமான பிளேயிங் லெவனுடன் இறங்கும் சஞ்சு சாம்சன்! - இரு அணிகளில் என்னென்ன மாற்றங்கள்? விபரம் உள்ளே! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *