கெத்தான மாற்றத்துடன் வருகிறது மும்பை அணி... முதலில் பேட்டிங்...ஹைதராபாத் பிளேயிங் லெவனில் ட்விஸ்ட்... விபரம் உள்ளே! 1

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இரு அணிகளின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை கீழே காண்போம்.

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் முதலில் பவுலிங் செய்வதாக முடிவு செய்தார்.

கெத்தான மாற்றத்துடன் வருகிறது மும்பை அணி... முதலில் பேட்டிங்...ஹைதராபாத் பிளேயிங் லெவனில் ட்விஸ்ட்... விபரம் உள்ளே! 2

 

இரு அணிகளும் தொடர்ச்சியாக இரண்டு லீக் போட்டிகளில் வெற்றி பெற்று புது உத்வேகத்துடன் இந்த போட்டிக்கு வந்திருக்கின்றன. மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நல்ல பார்மில் இருப்பதால் சொந்த மைதானத்தின் பலத்துடன் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிஹை ஆதிக்கம் செலுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய பிளேயிங் லெவனில் ஒரு முக்கிய மாற்றத்துடன் களமிறங்குகிறது. மேலும் ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக வந்திருக்கிறார் ( கடந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் தற்காலிக கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொருத்தவரை, எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

 

 

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல் கீழே பின்வருமாறு கொடுக்கப்பட்டிருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்):

மயங்க் அகர்வால், ஹாரி புரூக், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென்(கீப்பர்), அபிஷேக் சர்மா, வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, டி நடராஜன்

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், அர்ஜுன் டெண்டுல்கர், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

கெத்தான மாற்றத்துடன் வருகிறது மும்பை அணி... முதலில் பேட்டிங்...ஹைதராபாத் பிளேயிங் லெவனில் ட்விஸ்ட்... விபரம் உள்ளே! 3

ராஜீவ் காந்தி மைதானத்தை பொருத்தவரை, இரண்டாவது பேட்டிங் செய்த அணி அதிக அளவில் வெற்றியை பெற்று இருக்கிறது. இதன் காரணமாகவே ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.