எந்த கிரவுண்டா இருந்தாலும் எங்க பிளேயிங் லெவன் இதான்... தல தோனி போடும் கணக்கு... சிஎஸ்கே முதலில் பவுலிங்.... இரு அணிகளின் பிளேயிங் லெவன் என்னென்ன? - விபரம் உள்ளே! 1

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் லீக் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பவுலிங் செய்கிறது. சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் பிளேயிங் லெவன் விவரங்களை கீழே காண்போம்.

ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் 37ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக முடிவு செய்தார்.

எந்த கிரவுண்டா இருந்தாலும் எங்க பிளேயிங் லெவன் இதான்... தல தோனி போடும் கணக்கு... சிஎஸ்கே முதலில் பவுலிங்.... இரு அணிகளின் பிளேயிங் லெவன் என்னென்ன? - விபரம் உள்ளே! 2

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று வெற்றிகள் பெற்று இப்போட்டிக்கு வந்திருக்கிறது. வெற்றி மனநிலையில் இன்றைய போட்டியிலும் பிளேயிங் லெவனில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை, தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய பிறகு இப்போட்டிக்கு வந்திருக்கிறது. பந்துவீச்சில் ஒரு மாற்றமும் செய்திருக்கிறது. முன்னணி வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் வெளியில் அமர்த்தப்பட்டு, சுழல் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா உள்ளே எடுத்து வரப்பட்டிருக்கிறார்.

புள்ளிப்பட்டியல் விபரம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், 10 புள்ளிகள் பெற்று முதல் மூன்று இடங்களுக்குள் தக்கவைக்கலாம். சிஎஸ்கே அணி ஏற்கனவே 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகள் பெற்று ஏறக்குறைய பிளே-ஆப் சுற்றில் ஒரு காலை எடுத்து வைப்பதற்கு வாய்ப்புகளும் உள்ளது.

எந்த கிரவுண்டா இருந்தாலும் எங்க பிளேயிங் லெவன் இதான்... தல தோனி போடும் கணக்கு... சிஎஸ்கே முதலில் பவுலிங்.... இரு அணிகளின் பிளேயிங் லெவன் என்னென்ன? - விபரம் உள்ளே! 3

இரு அணிகளின் பிளேயிங் லெவன் விவரங்கள் பற்றி பின்வருமாறு காண்போம்

ராஜஸ்தான் ராயல்ஸ் (பிளேயிங் லெவன்):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் பாடிக்கல், சஞ்சு சாம்சன்(கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

எந்த கிரவுண்டா இருந்தாலும் எங்க பிளேயிங் லெவன் இதான்... தல தோனி போடும் கணக்கு... சிஎஸ்கே முதலில் பவுலிங்.... இரு அணிகளின் பிளேயிங் லெவன் என்னென்ன? - விபரம் உள்ளே! 4

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):

ருத்துராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (கேப்டன்), மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் சிங்

எந்த கிரவுண்டா இருந்தாலும் எங்க பிளேயிங் லெவன் இதான்... தல தோனி போடும் கணக்கு... சிஎஸ்கே முதலில் பவுலிங்.... இரு அணிகளின் பிளேயிங் லெவன் என்னென்ன? - விபரம் உள்ளே! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *