2 கெத்தான மாற்றத்தொட வரோம் முடிஞ்சா ஜெயிங்க.. மும்பை அணி பக்கா பிளான்... சிஎஸ்கே முதலில் பவுலிங்... இரு அணிகளில் என்னென்ன மாற்றங்கள்? - விவரங்கள் உள்ளே! 1

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பவுலிங் செய்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இரு அணிகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பன பற்றிய விவரங்களை பின்வருமாறு காண்போம்.

ஐபிஎல் வரலாற்றில் பலரும் எதிர்பார்க்கும் போட்டியாக இருப்பது “எல்-கிளாசிகோ” என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை – இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி தான். இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சிஎஸ்கே அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். மேலும் அணியின் பிளேயிங் லெவனில் எந்தவித மாற்றமும் செய்யவில்லை என்றும் அறிவித்தார்.

2 கெத்தான மாற்றத்தொட வரோம் முடிஞ்சா ஜெயிங்க.. மும்பை அணி பக்கா பிளான்... சிஎஸ்கே முதலில் பவுலிங்... இரு அணிகளில் என்னென்ன மாற்றங்கள்? - விவரங்கள் உள்ளே! 2

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை, இன்றைய போட்டியில் இரண்டு முக்கிய மாற்றங்களுடன் களமிறங்குகிறது. திலக் வர்மா மற்றும் குமார் கார்த்திகேயா இருவரும் வெளியில் அமர்த்தப்பட்டு ராகவ் கோயல், ட்ரிஸ்டன் ஸ்டாப்ஸ் ஆகிய இரண்டு வீரர்கள் உள்ளே எடுத்து வரப்படுகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் 10 போட்டிகளில் 11 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 10 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளி பட்டியலில் நேராக இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் என்பதால் வெற்றி இரு அணிகளுக்கும் மிகமுக்கியமாகும்.

2 கெத்தான மாற்றத்தொட வரோம் முடிஞ்சா ஜெயிங்க.. மும்பை அணி பக்கா பிளான்... சிஎஸ்கே முதலில் பவுலிங்... இரு அணிகளில் என்னென்ன மாற்றங்கள்? - விவரங்கள் உள்ளே! 3

இரு அணிகளின் பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன? யார் யார் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார் ஆகியவை பற்றி விரிவாக பின்வருமாறு காண்போம்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):

ருத்துராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ். தோனி (கேப்டன்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா

 

2 கெத்தான மாற்றத்தொட வரோம் முடிஞ்சா ஜெயிங்க.. மும்பை அணி பக்கா பிளான்... சிஎஸ்கே முதலில் பவுலிங்... இரு அணிகளில் என்னென்ன மாற்றங்கள்? - விவரங்கள் உள்ளே! 4

மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்):

ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டிம் டேவிட், நேஹால் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், அர்ஷத் கான்

2 கெத்தான மாற்றத்தொட வரோம் முடிஞ்சா ஜெயிங்க.. மும்பை அணி பக்கா பிளான்... சிஎஸ்கே முதலில் பவுலிங்... இரு அணிகளில் என்னென்ன மாற்றங்கள்? - விவரங்கள் உள்ளே! 5

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *