முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு பிளேயிங் லெவனில் இடம்...ஆர்சிபி முதலில் பேட்டிங்... டெல்லி அணியில் முக்கிய வீரர் விலகல்! - ப்ளெயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? 1

மாற்று வீரராக வந்த முதல் போட்டியிலேயே பிளேயிங் லெவனில் விளையாட வைக்கப்பட்டிருக்கிறார் கேதர் ஜாதவ். ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இரு அணிகளிலும் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை கீழே பார்க்கலாம்.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளசிஸ், முதலில் ஆர்சிபி அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு பிளேயிங் லெவனில் இடம்...ஆர்சிபி முதலில் பேட்டிங்... டெல்லி அணியில் முக்கிய வீரர் விலகல்! - ப்ளெயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? 2

ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் ஒரு மாற்றம் செய்திருக்கிறது. கடந்த போட்டிக்கு முன்பு டேவிட் வில்லே-க்கு பதிலாக மாற்று வீரராக உள்ளே எடுத்துவரப்பட்ட கேதர் ஜாதவ் இன்றைய போட்டியில் பிளேயிங் லெவனில் விளையாட வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு பிளேயிங் லெவனில் இடம்...ஆர்சிபி முதலில் பேட்டிங்... டெல்லி அணியில் முக்கிய வீரர் விலகல்! - ப்ளெயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? 3

டெல்லி அணி இரண்டு மாற்றங்களுடன் களமிறங்குகிறது. மிட்ச்சல் மார்ஸ் மற்றும் முகேஷ் குமார் இருவரும் பிளேயிங் லெவனில் விளையாடுகின்றனர், ஆன்ரிச் நார்க்கியா சொந்த காரணங்களுக்காக இன்று விளையாடவில்லை.

புள்ளி பட்டியலை பார்க்கையில், ஆர்சிபி அணி 9 போட்டிகளில் ஐந்து வெற்றிகள், நான்கு தோல்விகள் பெற்று 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு பிளேயிங் லெவனில் இடம்...ஆர்சிபி முதலில் பேட்டிங்... டெல்லி அணியில் முக்கிய வீரர் விலகல்! - ப்ளெயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? 4

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பொறுத்தவரை, 9 போட்டிகளில் மூன்று வெற்றிகள் மற்றும் ஆறு தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும். இல்லையெனில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு மிகமிகக் குறைவாகிவிடும். மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகையால் வெற்றி பெறும் முனைப்பில் இருப்பார்கள்.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் விவரங்களை பின்வருமாறு காணலாம்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் (பிளேயிங் லெவன்):

டேவிட் வார்னர்(கேப்டன்), பிலிப் சால்ட்(கீப்பர்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், மணீஷ் பாண்டே, அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது

முன்னாள் சிஎஸ்கே வீரருக்கு பிளேயிங் லெவனில் இடம்...ஆர்சிபி முதலில் பேட்டிங்... டெல்லி அணியில் முக்கிய வீரர் விலகல்! - ப்ளெயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? 5

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (பிளேயிங் லெவன்):

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (கீப்பர்), கேதர் ஜாதவ், வனிந்து ஹசரங்கா, கர்ன் ஷர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *