தோனி பாணியில் அணியை தேர்வு செய்த சஞ்சு சாம்சன்... முதலில் பவுலிங் செய்கிறது... பிளேயிங் லெவனில் அப்படி என்னா இருக்கிறது? - உள்ளே பார்க்கலாம்! 1

பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் எட்டாவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி கௌகாத்தி மைதானத்தில் நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றதால், தோனி பாணியில் சென்டிமென்டாக அதே அணியுடன் இன்றைய போட்டியிலும் களம் இறங்குகிறது என்று சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

தோனி பாணியில் அணியை தேர்வு செய்த சஞ்சு சாம்சன்... முதலில் பவுலிங் செய்கிறது... பிளேயிங் லெவனில் அப்படி என்னா இருக்கிறது? - உள்ளே பார்க்கலாம்! 2

பஞ்சாப் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, கடந்த போட்டியில் கொல்கத்தா அணியை டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் இன்றைய போட்டியில் களம் இறங்குகிறது. இந்த அணியும் சென்டிமென்டாக எந்தவித மாற்றமும் செய்யாமல் அதே பிளேயிங் லெவனுடன் களமிறங்குகிறது.

இரு அணிகளின் பிளேயிங் லெவனை பார்ப்போம்.

பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: ஷிகர் தவான்(கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா(கீப்பர்), ஷாருக் கான், சாம் கர்ரன், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங்.

தோனி பாணியில் அணியை தேர்வு செய்த சஞ்சு சாம்சன்... முதலில் பவுலிங் செய்கிறது... பிளேயிங் லெவனில் அப்படி என்னா இருக்கிறது? - உள்ளே பார்க்கலாம்! 3

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்.

தோனி பாணியில் அணியை தேர்வு செய்த சஞ்சு சாம்சன்... முதலில் பவுலிங் செய்கிறது... பிளேயிங் லெவனில் அப்படி என்னா இருக்கிறது? - உள்ளே பார்க்கலாம்! 4

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொருத்தவரை, முழுக்க முழுக்க டாப் 3 பேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பி இருக்கிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிதளவு சோபிக்கவில்லை.

அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் மூன்று பேர் இருக்கின்றனர். ஜோஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் இடதுகை  வேகப்பந்துவீச்சாளர்களை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு இருக்கின்றனர். இரு அணிகளிலும் இப்படியொரு பிரச்சினை இருக்கிறது  இவற்றை சமாளித்து இந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *