இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, டெல்லி கேப்டல்ஸ் அணியில் ஆலோசகர் பொறுப்பேற்கிறார். இதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
2019ஆம் ஆண்டுக்கு ஐபில் துவங்கும் முன்பே அந்தந்த அணிகள் தரும் அறிவிப்பால் பரபரப்பும் எதிர்பார்ப்பும் நிகழ்ந்துள்ளது. அதுமட்டுமில்லால், பல இளம் வீரர்கள் கோடிகளில் ஏழாம் எடுக்கப்பட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர். குறிப்பாக சென்னையை சேர்ந்த இளம் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 8.4கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. காரணம், இவர் இந்திய அணிக்காக இதுவரை ஒரு போட்டி கூட ஆடியதில்லை.
அதன் பின் வேகப்பந்து வீச்சாளர் உனட்கட் ராஜஸ்தான் அணியால் 8.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவர்கள் இருவரும் தான் அதிக விலைக்கு ஏலம் போயினர்.
மேலும், சென்னையிலிருந்து பஞ்சாப் அணிக்கு சென்ற மோஹித் சர்மா மீண்டும் சென்னைக்கு திரும்பினார். யுவராஜ் சிங் மும்பை அணியால் 2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
சன் ரைசஸ் அணிக்கு தடை முடிந்து மீண்டும் திரும்புகிறார் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர். ஆனால், பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடரில் வில்லியம்சன் காயமடைந்தார். இதனால் ஐபில் போட்டிகளில் அவர் ஆடுவது சந்தேகம் ஆகியுள்ளது.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, இதுவரை டெல்லி டேர்டெவில்ஸ் என இருந்த டெல்லி அணி, இம்முறை ஐபில் போட்டிகளில் டெல்லி கேப்டல்ஸ் என களமிறங்குகிறது. அணியில் மேலும் பல மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது டெல்லி அணியின் மேலாண்மை.
அதில் ஒன்றாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி, டெல்லி கேப்டல்ஸ் அணிக்கு புதிய ஆலோசராக நியமிக்கப்பட்டுளார். இதற்க்கான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டது டேல்லி கேப்டல்ஸ் அணி.
ட்விட்டர் பதிவு:
BREAKING: Tigers, say hello to our Royal Bengal Tiger!
We're delighted to welcome @SGanguly99 to Delhi Capitals, in the role of an Advisor. #ThisIsNewDelhi #DelhiCapitals pic.twitter.com/TUt0Aom5MR
— Delhi Capitals (Tweeting from ?) (@DelhiCapitals) March 14, 2019