இந்திய அணி முன்பை விட தற்போது சக்தி வாய்ந்த அணியாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் இளம் வீரர்கள் தான். தற்போது நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத் தொடரில் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினர்.
குறிப்பாக இளம் வீரர்களான நடராஜன், முகமது சிராஜ், ரிஷப் பண்ட், அக்சர் பட்டேல், சர்துல் தாகூர், ராகுல் சஹர், குர்னால் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இதுத்தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் என அனைவரும் இவர்களை பாராட்டி வருகின்றனர். ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடிய நடராஜன், சிராஜ் உட்பட ஐந்து இளம் வீரர்களுக்கு இந்திய தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கௌரவப்படுத்தும் வகையில் 14 லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக கொடுத்திருக்கிறார். இந்திய இளம் வீரர்கள் அனைவரும் பயமின்றி விளையாடியதாகவும் அனைவரும் கூறி வந்தனர்.
தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி இந்திய வீரர்களின் திறமையையும் களத்தில் பயமின்றி விளையாடியதையும் பாராட்டி பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் “சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும்போது வீரர்கள் பயமின்றி இருக்கின்றனர். அதற்கு உதராணமாக பண்ட், ஹர்திக் பாண்டியாவை கூறலாம். இவர்கள் தங்களது திறமையை மட்டும் நம்புவதில்லை, மனதளவிலும் தங்களை தயார் செய்துக் கொள்கிறார்கள். எங்களது காலத்தில் 7 மணி ஆனாலே பதற்றம் வந்துவிடும்.
எங்களிடம் நம்பிக்கை இருந்தாலும் பதற்றத்தை தவிர்க்க முடியாது. ஆனால் தற்போது இருக்கும் வீரர்கள் அனைவரும் இதை பத்தி எல்லாம் கவலைப்படாமல் பயமின்றி சிறப்பாக விளையாடி வருகிறார்கள்” என்று கங்குலி இந்திய வீரர்களை பாராட்டியிருக்கிறார். தோனியும் இது போன்று தான் களத்தில் எப்போதுமே ஜாலியாக இருப்பார். விளையாடும் போது கூட அவரிடம் பயம் மற்றும் பதற்றம் இருக்காது. இது போன்று தான் தற்போது வீரர்கள் விளையாடி வருகிறாகள்.
