அவர் அடித்த ஷாட்.. கிரிக்கெட் உள்ளவரை நினைவில் இருக்கும் – அதிசயமாக தோனியை புகழ்ந்த கங்குலி!
உலகக்கோப்பை பைனலில் தோனி அடித்த கடைசி ஷாட் கிரிக்கெட் உள்ளவரை நினைவில் இருக்கும் என பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் கேப்டன் கங்குலி புகழ்ந்துள்ளார்.
கங்குலிக்கு பிறகு இந்திய அணியை நன்கு வழிநடத்தி சென்றவர் என்றால் அது தோனி மட்டுமே. தற்போது விராட்கோலி நன்கு செயல்பட்டு வந்தாலும், கோப்பைகளை வெல்லும் அளவிற்கு அணியை வழிநடத்துவதில் தோனி கெட்டிக்காரர்.
ஆம், தோனி தலைமையில் ஐசிசி-யின் அனைத்துவித கோப்பைகளையும் இந்தியாவிற்கு பெற்றுத்தந்தவர் தோனி. இவர் தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என மூன்றையும் இந்தியா வென்றது.
இந்நிலையில், தனியார் நிறுவனத்திற்கு நேரலை ஒன்றில் பேசிய கங்குலி, அதில் “தலைமை பண்பு” குறித்து உரையாடினார். அப்போது 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர்களை உதாரணமாக எடுத்து பேசினார்.
2003 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்ற இந்தியா, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. ஒட்டுமொத்த இந்தியாவையும் கண்கலங்க வைத்தது. இருப்பினும், 2011ஆம் ஆண்டு தோனி தலைமையிலான அணி கோப்பையை வென்று கனவை நனவாக்கியது.
“2011ஆம் உலகக்கோப்பையில் ஆடிய இந்திய வீரர்களில் சுமார் 8 வீரர்கள் எனது தலைமையில் கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கியவர்கள். குறிப்பாக, யுவராஜ், ஹர்பஜன், ஜாஹீர், நெஹ்ரா, சேவாக், தோனி ஆகியோர் ஆவர். நான் கேப்டனாக இருந்து அவர்களை கண்டெடுத்து அணிக்காக விட்டு சென்றதில் இன்றளவும் பெருமிதம் கொள்கிறேன். உள்நாடு, வெளிநாடு என இரண்டிலும் திறம்பட செயல்படக்கூடிய அணியை தான் நான் விட்டுவிட்டு சென்றிருக்கிறேன் என்று நினைக்கையில் இதைவிட கேப்டனுக்கு வேறென்ன வேண்டும்.” என்றார்.
மேலும், “2011 உலகக்கோப்பை இந்தியாவிற்கு பெருமைதரும் தருணம். குறிப்பாக, கடைசியில் தோனி அடித்த அந்த சிக்ஸர் ஷாட்.. கிரிக்கெட் உள்ளவரை அனைவரின் நினைவிலும் இருக்கும்.” என்கிறார்.
இந்த அணியில் ஆடிய நெஹ்ரா, ஜாஹீர், ஹர்பஜன், சேவாக், யுவராஜ், சச்சின் ஆகியோர் 2003 உலகக்கோப்பையில் ஆடியுள்ளார்கள்