டெஸ்ட் தொடரில் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இருக்கு – கங்குலி வெளியிட்ட தகவலால் ரசிகர்கள் ஜாலி!
அடுத்துவரும் டெஸ்ட் தொடர்களில் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் புதிய தகவலை வெளியிட்டுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.
இந்திய அணி தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அட்டகாசம் செய்து வருகிறது. குறிப்பாக, இதுவரை ஆடிய 7 டெஸ்ட் போட்டிகளில் அனைத்தையும் வென்று 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில கம்பீரமாக நீடிக்கிறது. இரண்டாவதாக, 10 போட்டிகளில் 7 வெற்றி மற்றும் ஒரு ட்ரா என 296 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி உள்ளது.
இந்நிலையில், நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரை முடித்துவிட்டு, தற்போது டெஸ்ட் தொடருக்காக பயிற்சி செய்து வருகிறது. 21ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும், 29ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெற இருக்கிறது.
இந்திய அணி முதல் முறையாக வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் அரங்கில் கடந்த ஆண்டு பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை பிங்க் நிறப்பந்தில் ஆடியது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. பிங்க் நிறப்பொட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்த தொடர்களில் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தை வைக்க ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்க்கு பதில் அளித்த கங்குலி, “இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களின் ஏதேனும் ஒருபோட்டி பகலிரவு ஆட்டமாக நிச்சயம் நடக்கும்” என்றார்.
இதேநேரம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடக்கவிருக்கும் தொடரில் பகலிரவு டெஸ்ட் போட்டியை வைக்க ஒப்புதல் அளிக்குமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தது. இதற்கு தற்போது பதிலளித்துள்ளார் கங்குலி.
அவர் கூறுகையில், “அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா வரும் இங்கிலாந்து அணியுடனான தொடரில் பகலிரவு டெஸ்ட் இடம்பெறும். எந்த போட்டி மற்றும் மைதானம் என்பது பின்னர் வெளியிடப்படும். அதற்க்கு முன்னதாக வரவிருக்கும் ஆஸ்திரேலிய தொடரிலும் பகலிரவு டெஸ்ட் இடம்பெற உள்ளது” என கூறினார்.
இதற்க்கு நெட்டிசன்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.