டெல்லியில் பிறந்து இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த விரேந்தர் சேவாக்கை கவுரவிக்க பெரோஷா கோட்லா மைதானத்தின் இரண்டாவது கேட்டுக்கு விரேந்தர் சேவாக் பெயரை வைக்க டெல்லி கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அந்த மைதானத்தின் 2வது கேட்டை விரேந்தர் சேவாக் கேட் என்று அழைப்பார்கள்.
நியூஸிலாந்துக்கு எதிராக முதல் டி20 போட்டியில் இந்திய அணி டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் மோத உள்ளது. அந்த போட்டிக்கு முன் நாள் அந்த கேட்டை திறப்பார்கள்.
டெல்லி கிரிக்கெட்டுக்காக பல கிரிக்கெட் வீரர்கள் விளையாடி உள்ளார்கள், அவர்களை கவுரவிக்க விரும்புகிறோம், அந்த திட்டத்தின் முதல் வேலை இரண்டாவது கேட்டுக்கு சேவாக் பெயரை வைப்பது தான் டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் திட்டம் என தகவல் வந்தன. டெல்லி அணிக்காக உழைத்த வீரர்கள் மைதானத்தில் பிரதிபலிப்பார்கள்.
“எங்களது அணி உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது சந்தோஷம் அளிக்கிறது. நார்த் சோன் வினோ மங்கட் டிராபியில் சிறப்பாக விளையாடிய 19 வயதிற்கு உட்பட்டோர்க்கான அணி கோப்பையை வென்றது. 23 வயதிற்கு உட்பட்டோர்கள் அணி மற்றும் ரஞ்சி டிராபி அணியும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்,” என டெல்லி கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கூறினார்.
டெஸ்ட் போட்டியின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவர் தான் விரேந்தர் சேவாக். எதிரணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்யும் விரேந்தர் சேவாக், டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், டெஸ்ட் போட்டியில் அவர் இரண்டு முறை முச்சதம் அடித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் அவர் வெத்துவேட்டு இல்லை, அதிர்வேட்டு. ஒருநாள் போட்டிகளிலும் அவர் இரட்டை சதம் அடித்துள்ளார். 251 ஒருநாள் மாற்று 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விரேந்தர் சேவாக் ஒருநாள் போட்டிகளில் 8273 ரன்னும், டெஸ்ட் போட்டிகளிலும் 8586 ரன்னும் அடித்திருக்கிறார்.