இந்த ஒன்னுதான் விராட்கோலிய பேஸ்ட்டா மாத்திருக்கு; யாரையும் புகழாத கம்பீரே கோஹ்லியை புகழ்ந்துள்ளார்! 1

இந்த ஒன்னுதான் விராட்கோலிய பேஸ்ட்டா மாத்திருக்கு; யாரையும் புகழாத கம்பீரே கோஹ்லியை புகழ்ந்துள்ளார்!

இந்த ஒரு விஷயம் மட்டுமே விராட்கோலியை மற்ற வீரர்களிடம் இருந்து சிறந்த வீரராக காட்டுகிறது என முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் புகழ்ந்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக இருந்துவரும் விராட் கோலி தொடர்ந்து பல ஆண்டுகளாக இடைவிடாது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இதுவரை 43 சதங்கள் விளாசியுள்ளார். அதுமட்டுமில்லாது டெஸ்ட் போட்டியில் 27 சதங்கள் என மொத்தம் 70 சதங்கள் அடித்திருக்கிறார்.

இந்த ஒன்னுதான் விராட்கோலிய பேஸ்ட்டா மாத்திருக்கு; யாரையும் புகழாத கம்பீரே கோஹ்லியை புகழ்ந்துள்ளார்! 2

ஒட்டுமொத்தமாக அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்தபடியாக, விராட்கோஹ்லி இரண்டாம் இடத்தில் உள்ளார்.  சச்சின் டெண்டுல்கர் ஒட்டுமொத்தமாக 100 சதங்கள் அடித்திருக்கிறார்.

விராட்கோலி இப்படி பல சாதனைகள் புரிவதற்கு தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவதே காரணம் ஆகும். விராட்கோலி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுவதற்கு இது ஒன்றுதான் காரணம் என புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீர்.

இந்த ஒன்னுதான் விராட்கோலிய பேஸ்ட்டா மாத்திருக்கு; யாரையும் புகழாத கம்பீரே கோஹ்லியை புகழ்ந்துள்ளார்! 3

கௌதம் கம்பீர் கூறுகையில், “ரோகித் சர்மா மிகப்பெரிய ஷாட்டுகளை அடிக்கக் கூடியவர். ஆனால் உரிய நேரத்தில் ஒன்று இரண்டு ரன்களை எடுக்க தவறிவிடுகிறார். ஆனால், பந்தை வீணாக்காமல் தட்டிவிட்டு ஒன்றிரண்டு ரன்களை எடுப்பதனால், விராட்கோலி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுகிறார்.

அதிரடி வீரர்களான டிவில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கேயில் ஆகியோரும் மிகப்பெரிய ஷாட்டுகளை அடித்தாலும் ஒன்றிரண்டு ரன்கள் எடுக்க தவறுவதால் விராத் கோலியை போன்று தொடர்ச்சியாக நன்கு செயல்பட தவறுகின்றனர். இதனாலேயே விராட் கோலி தலைசிறந்த வீரராகவும் அதிக ரன் குவிப்பவராகவும் இருக்கிறார்.” என்றார்.

இந்த ஒன்னுதான் விராட்கோலிய பேஸ்ட்டா மாத்திருக்கு; யாரையும் புகழாத கம்பீரே கோஹ்லியை புகழ்ந்துள்ளார்! 4

மேலும் விராட் கோலி மற்றும் தோனி இருவரின் கேப்டன் பொறுப்பையும் ஒப்பிட்டு பேசிய கம்பீர், “விராட் கோலி தலைமையில் இந்திய அணி எவ்வித கோப்பைகளையும் வெல்லவில்லை. ஆனால் தோனி பல கோப்பைகளை பெற்றுத் தந்திருக்கிறார். விராத் கோலிக்கு இன்னும் முதிர்ச்சி தேவை. தோல்வியினால் பல அனுபவங்களை பெற்று வருகிறார். அடுத்தடுத்த வருடங்களில் கோப்பைகளை குவிப்பார் என நம்புகிறேன். அணி வீரர்களை நல்ல மனநிலையுடன் வைத்திருக்கிறார்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *