பாகிஸ்தானை வீழ்த்துவது இந்த இரண்டு பேரின் கையில் தான் உள்ளது; கவுதம் கம்பீர் உறுதி !! 1

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் பொறுப்புடன் விளையாடினால் மட்டுமே பாகிஸ்தான் அணியை வீழ்த்த முடியும் என முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு அரசியல் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் கடந்த சில வருடங்களாக நேரடியான எந்த தொடரிலும் விளையாடுவது இல்லை. ஐசிசி.,யால் நடத்தப்படும் தொடர்களில் மட்டுமே இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.

பாகிஸ்தானை வீழ்த்துவது இந்த இரண்டு பேரின் கையில் தான் உள்ளது; கவுதம் கம்பீர் உறுதி !! 2

இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போரை பார்த்து கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகிவிட்டதால், இந்த வருட் இறுதியில் நடைபெற இருக்கும் டி.20 உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது. இந்த உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளதால் மற்ற அனைத்து போட்டிகளையும் விட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தநிலையில், டி.20 உலகக்கோப்பையின் போது நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பொறுப்புடன் விளையாடினால் மட்டுமே பாகிஸ்தானை வீழ்த்த முடியும் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானை வீழ்த்துவது இந்த இரண்டு பேரின் கையில் தான் உள்ளது; கவுதம் கம்பீர் உறுதி !! 3

இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “நான் பாகிஸ்தானுக்கு எதிராக எனது முதல் போட்டியில் ஆடியபோது, மிகுந்த ஆர்வத்துடனும், அதே நேரத்தில் பதற்றத்துடனும் இருந்தேன். நிறைய போட்டிகளில் ஆடிய சீனியர் வீரர்களுடன் ஒப்பிடும்போது, நான் தான் அதிக பதற்றத்துடன் இருந்தேன். எனவே பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும்போது இளம் வீரர்கள் ரிலாக்ஸாக ஆடவேண்டுமென்றால் சீனியர் வீரர்கள் பொறுப்புடன் ஆட வேண்டும். விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய சீனியர் வீரர்கள் பொறுப்பை தங்களது தோள்களில் சுமந்து பொறுப்புடன் ஆட வேண்டும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *