லக்னோ டீம் கேப்டன்னு நான் சாதகமா பேசல... கேஎல் ராகுலுக்கு இன்னும் வாய்ப்புகள் கொடுத்து சப்போர்ட் பண்ணனும் - கம்பீர் பேச்சு! 1

கேஎல் ராகுலுக்கு உரிய சப்போர்ட் கொடுங்கள், அவரைபோன்ற வீரர்களிடமிருந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிக்கொண்டுவர இது உதவும் என்று பேசியுள்ளார் கௌதம் கம்பீர்.

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கின்றன. இந்த இரண்டையும் இந்திய அணி கைப்பற்றி தொடரில் முன்னிலை வகிக்கிறது.

ஒட்டுமொத்தமாக, இந்திய அணியின் செயல்பாட்டில் எந்தவித குறையும் இல்லை என்றாலும், துவக்க வீரர் கேஎல் ராகுலின் ஃபார்ம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது. இது அணி நிர்வாகத்திற்கும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது. ஏனெனில் நிர்வாகம் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுத்தும், அதை ரன்களாக மாற்ற முடியாமல் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்து வருகிறார்.

லக்னோ டீம் கேப்டன்னு நான் சாதகமா பேசல... கேஎல் ராகுலுக்கு இன்னும் வாய்ப்புகள் கொடுத்து சப்போர்ட் பண்ணனும் - கம்பீர் பேச்சு! 2

இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு நடைபெற்ற லிமிடெட் ஓவர் போட்டிகளிலும் சொதப்பலான ஆட்டத்தை கேஎல் வெளிப்படுத்தினார். இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் 3 இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்து 38 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார்.

இருப்பினும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட அணியிலும் இவருக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவரை எடுத்ததற்க்கு விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் கேஎல் ராகுல் கேப்டனாக இருந்துவரும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் கம்பீர், கேஎல் ராகுலின் மனநிலை குறித்தும், அவருக்கு தற்போது என்ன தேவை என்பது குறித்தும் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

லக்னோ டீம் கேப்டன்னு நான் சாதகமா பேசல... கேஎல் ராகுலுக்கு இன்னும் வாய்ப்புகள் கொடுத்து சப்போர்ட் பண்ணனும் - கம்பீர் பேச்சு! 3

கம்பீர் பேசியதாவது, “சமூக வலைதளங்களில் கேஎல் மீது விமர்சன வலைகள் பின்னப்பட்டு வருகின்றன. விமர்சனங்கள் எப்போதும் வீரரின் பார்மை மீட்டுக் கொண்டுவருவதற்கு உதவுவதாக இருக்க வேண்டும். வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. ஒருவேளை அப்படிப்பட்ட விமர்சனங்கள் இருந்தால் அதை உங்கள் வீட்டிற்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். சமூக வலைதளங்களில் முன்வைக்காதீர்கள்.

அதேபோல் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கே எல் ராகுலை எடுக்க வேண்டுமா? கூடாதா? என்பதை தேர்வு குழுவினர் பார்த்துக் கொள்வார்கள. அவர்களுக்கு எப்படிப்பட்ட வீரர்களை அணியில் எடுக்க வேண்டும் என்று நன்றாக தெரியும்.

ஒரு வீரர் தன்னுடைய மோசமான பார்மில் இருக்கிறார் என்றால் அவரை மேலும் கீழே தள்ளும் வகையில் பேசுவது நியாயமற்றது. அவருக்கு ஆதரவாக இருந்து, மோசமான பார்மில் இருந்து வெளியே வருவதற்கு உதவவேண்டும்.

லக்னோ டீம் கேப்டன்னு நான் சாதகமா பேசல... கேஎல் ராகுலுக்கு இன்னும் வாய்ப்புகள் கொடுத்து சப்போர்ட் பண்ணனும் - கம்பீர் பேச்சு! 4

நான் பணியாற்றும் லக்னோ அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் இருக்கிறார் என்பதற்காக இதனை சொல்லவில்லை. எந்த ஒரு வீரராக இருந்தாலும் இதைத்தான் நான் வெளிப்படுத்தி இருப்பேன். ஒரு வீரருக்கு ஆதரவு தேவைப்படும் பொழுது அணியில் இருக்கும் வீரர்களும் பயிற்சியாளர்களும் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அதைத்தான் ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் செய்கிறார்கள்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *