இந்தியன் டீம் கேப்டன்னா அவ்ளோ ஈஸியா போச்சாடா.. ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவிற்கு கேப்டன், துணைகேப்டன் பொறுப்பு பற்றி கம்பீர் பேச்சு! 1

ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவருக்கும் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இலங்கை அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி டிசம்பர் 27ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியன் டீம் கேப்டன்னா அவ்ளோ ஈஸியா போச்சாடா.. ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவிற்கு கேப்டன், துணைகேப்டன் பொறுப்பு பற்றி கம்பீர் பேச்சு! 2

ஹர்திக் பாண்டியா-விற்கு டி20 கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் பலரும் ஆச்சரியப்படும் விதமாக சூரியகுமார் யாதவிற்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பல கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், சூரியகுமார் யாதவிற்கு துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது பற்றி முதலில் கருத்து தெரிவித்தார். பின்னர் ஹார்திக் பாண்டியா இனி நிரந்தரமாக டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என்றும் தனது கருத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

“ரோகித் சர்மா டி20 போட்டிகளுக்கு மீண்டும் திரும்பினால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும். ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் இருவரும் தொடர்ந்து கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்புகளில் இருப்பார்களா? மாட்டார்களா? என்பதும் பின்னர் தான் தெரிய வரும். என்னை பொறுத்தவரை இனி இவர்களே நீடிப்பது தான் அணிக்கு சிறந்தது.

இந்தியன் டீம் கேப்டன்னா அவ்ளோ ஈஸியா போச்சாடா.. ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவிற்கு கேப்டன், துணைகேப்டன் பொறுப்பு பற்றி கம்பீர் பேச்சு! 3

சூரியகுமார் யாதவ் பேட்ஸ்மேன் ஆக கேப்டன்களுக்கு தேவையானதை செய்து காட்டியிருக்கிறார். தற்போது அவர் மீது நம்பிக்கை வைத்து துணை கேப்டன் பொறுப்பையும் அணி நிர்வாகம் கொடுத்திருக்கிறது. முன்பைவிட இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ரோகித் சர்மா மீண்டும் அணிக்குள் திரும்பினாலும் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் அவர்களது பொறுப்பில் நீடிக்க வேண்டும். பொறுப்பை கொடுப்பதும் அதை திரும்பப் பெற்றுக்கொள்வதுமாக இருந்தால் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. எடுக்கப்பட்ட இந்த முடிவை நம்பிக்கை வைத்து தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

இந்தியன் டீம் கேப்டன்னா அவ்ளோ ஈஸியா போச்சாடா.. ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவிற்கு கேப்டன், துணைகேப்டன் பொறுப்பு பற்றி கம்பீர் பேச்சு! 4

2023ல் 50-ஓவர் உலகக்கோப்பை வரவிருக்கிறது. ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும். பணிச்சுமை என்பது தெரியாது. ஹர்திக் பண்டியாவிற்கு அடுத்து வரவுள்ள டி20 உலககோப்பைக்குள் நல்ல பயிற்சியாக இருக்கும்.

இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்பு என்பது அவ்வளவு எளிதல்ல. முன்பு இருந்த வீரர்கள் எவ்வளவு ஈடுபாட்டுடன் தங்களது முழு பங்களிப்பை கொடுத்தார்கள் என்பதை உணர்ந்து, தற்போது பொறுப்பேற்க இருப்பவர்களும் அதை ஈடுபாடை காட்ட வேண்டும். அப்பொழுதுதான் இளம் வீரர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க முடியும்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *