Cricket, Gambhir, Gurmeet Ram Rahim Singh,

பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் (50) குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணாவில் கலவரம் வெடித்தது. இதில் 31 பேர் பலியாயினர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கடந்த 1948-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி மஸ்தானா பலுசிஸ்தானி என்பவர் தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பைத் தொடங்கினார். இவர் 1960-ல் இறந்தார். இதன்பின் தலைமை பொறுப்பேற்ற ஷா சத்னம் சிங் என்பவர் 1990 வரை பதவி வகித்தார். கடந்த 1991 செப்டம்பர் 23-ல் தேரா சச்சா சவுதாவின் புதிய தலைவராக குர்மீத் ராம் ரஹீம் சிங் பதவியேற்றார்.

ஹரியாணா மாநிலம் சிர்ஸாவில் அந்த அமைப்பின் தலைமை ஆசிரமம் உள்ளது. உள்நாடு, வெளிநாடுகளில் 46 கிளை ஆசிரமங்களும் சுமார் 6 கோடி பக்தர்களும் உள்ளனர். குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு திருமணமாகி 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 2014 ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் பாஜகவை ஆதரித்தார். அரசியல் செல்வாக்கு காரணமாக அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

தலைநகர் டெல்லியிலும் தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். அங்குள்ள ஆனந்த் விஹார் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கயாலா பகுதியில் ஒரு பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

பஞ்சாப், ஹரியாணா, டெல்லியில் நேற்று நடந்த வன்முறை, கலவரங்களில் ஒட்டுமொத்தமாக 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனால், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பிர் இந்த வன்முறையை பற்றி ட்விட்டரில் ட்வீட் செய்தார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *