கோஹ்லி இல்லை.. ரோஹித் சர்மாவின் வெற்றி பயணத்திற்கு இவர் தான் முக்கிய காரணம்; கம்பீர் ஓபன் டாக் !! 1

கோஹ்லி இல்லை.. ரோஹித் சர்மாவின் வெற்றி பயணத்திற்கு இவர் தான் முக்கிய காரணம்; கம்பீர் ஓபன் டாக்

இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் முக்கியமான வீரராக உள்ளவர் ரோஹித் சர்மா. இந்திய கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டனான ரோஹித், சர்வதேச கிரிக்கெட்டில் தன்னை மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்ற அந்தஸ்துக்கு உயர்த்திக்கொண்டுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 9000 ரன்கள் அடித்துள்ள ரோஹித், டி-20கிரிக்கெட்டில் 2773 ரன்கள் அடித்து, அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். கடந்த 2007 இல் மிடில் ஆர்டர் வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மாவை, கடந்த 2013 இல் அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த தோனி துவக்க வீரராக களமிறக்கினார்.

கோஹ்லி இல்லை.. ரோஹித் சர்மாவின் வெற்றி பயணத்திற்கு இவர் தான் முக்கிய காரணம்; கம்பீர் ஓபன் டாக் !! 2

கடந்த 2013 இல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில், துவக்க வீரராக களமிறங்கி ரோஹித் 5 இன்னிங்சில், 177 ரன்கள் அடித்தார். ஆரம்ப காலத்தில் மிடில் ஆர்டர் இடத்தில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித்திற்கு தோனி ஆதரவாக இருந்தார் என முன்னாள் வீரர் காம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காம்பீர் கூறுகையில், “ரோஹித் சர்மா இன்று யாராக உருவாகியுள்ளார் என்பதற்கு எல்லாம தோனி தான் காரணம். தேர்வுக்குழுவும், அணி நிர்வாகமும் ஒரு வீரரை கேப்டன் விரும்பவில்லை என்றால் தேர்வு செய்யாது. ஆனால் தோனி ரோஹித்திற்கு ஆரம்ப காலத்தில் ஆதரவாகவே இருந்தார். அதற்கு எல்லா பெருமையும் தோனிக்கே உரியது. எல்லா வீரர்களுக்கு தங்களின் கேப்டன்களிடமிருந்து இது கிடைத்து விடாது” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *