கிரிக்கெட் விளையாட்டில் பெரும் தொடராக கருதப்படும் உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 100 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. ஆதலால், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஒவ்வொரு நாட்டின் அணியிலும் தங்களுக்கு சரியென பட்ட 15 வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையில், கெளதம் கம்பிர் இந்திய அணியில் பலம் வாய்ந்த 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி இது தான் என வெளியிட்டுள்ளார்.
உலகக் கோப்பை வென்ற நட்சத்திர வீரர் அஸ்வின் இந்தியாவின் உலகக் கோப்பை 2019 அணிக்காக தேர்வு செய்யப்பட்டு 15 உறுப்பினர்களைக் கொண்ட அணியில் அவர் இடம்பெற வேண்டும் என கம்பீர் கூறியது ஆச்சரியங்களை நிரம்பியதாக இருந்தது. கம்பீர், குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் இருவருடன் இருவருடன் இணைந்து தனது மூன்றாவது ஸ்பின்னராக முதுபெரும் ஆஃப்-ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் எடுத்துக்கொண்டார். அஷ்வின், 2017 இன் நடுவில் கரீபியர்களின் சுற்றுப்பயணத்தின் பிறகு ஒருநாள் போட்டிகளில் இடம்பெறவில்லை. ஆதலால், அஷ்வினை கம்பீர் தேர்வு செய்தது ஆச்சர்யபடுத்தியது.
அவரது அனுபவத்தை கருத்தில் கொண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு அஷ்வின் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று காம்பீர் தெரிவித்தார். அஷ்வின் தனது இளைய தோழர்களுக்கு பெரும் உதவியாக இருப்பார் என்று கருதுவதாக கம்பீர் கூறினார்.
மேலும் கம்பீர் அணியில், அனுபவம் மிக்க தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை. அதற்க்கு பதிலாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் ரிஷப பண்ட் இடம்பிடித்ததை தொடர்ந்து, உலகக்கோப்பை அணியிலும் இவர் இடம்பெறுவார் என கருத்து தெரிவித்துள்ளார் கம்பீர்.
தவான் மற்றும் ரோஹித் தொடர்ந்து மூன்றாவது துவக்க வீரராக இக்கட்டான சூழ்நிலைகளில் உதவ கே எல் ராகுல் இருப்பார் என கம்பீர் கூறினார்.
கம்பீரின் உத்தேச 15பேர் கொண்ட உலகக்கோப்பை அணி:
ரோஹித் சர்மா, கே எல் ராகுல், விராத் கோஹ்லி, அம்பதி ராயுடு, எம்.எஸ். தோனி, கேதர் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, குல்தீப் யாதவ், யூசுந்தேந்திர சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஷிகார் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், விஜய் ஷங்கர்.