தோனி செய்வது மிகப்பெரிய தவறு ; இவரே இப்படி இருந்தா என்ன பண்றது ! கவுதம் கம்பீர் பரபரப்பு பேச்சு 1

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கொல்கத்தா அணிக்காக இரண்டு முறை கோப்பை வென்று தந்த கவுதம் கம்பீர் தோனியின் பேட்டிங் இடம் குறித்து பேசியிருக்கிறார்.

14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

தோனி செய்வது மிகப்பெரிய தவறு ; இவரே இப்படி இருந்தா என்ன பண்றது ! கவுதம் கம்பீர் பரபரப்பு பேச்சு 2

இந்நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 8வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மறி பஞ்சாப் கிங்ஸ் அணி மோதுகிறது. இதில் பஞ்சாப் அணி ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டும் என அனைவரும் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.

தோனி செய்வது மிகப்பெரிய தவறு ; இவரே இப்படி இருந்தா என்ன பண்றது ! கவுதம் கம்பீர் பரபரப்பு பேச்சு 3

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கொல்கத்தா அணிக்காக இரண்டு முறை கோப்பை வென்று தந்த கவுதம் கம்பீர் தோனியின் பேட்டிங் இடம் குறித்து பேசியிருக்கிறார். கவுதம் கம்பீர் பேசுகையில் “அணியை நாம் முன்னிருந்து வழிநடத்த வேண்டும். அதேபோல பேட்டிங்கில் முன்னரே களமிறங்கி வாளையாட வேண்டும். இதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.

தோனி 7வது இடத்தில் களமிறங்கி விளையாடினால் அணியை வழிநடத்துவது கஷ்டம். தோனி போன்ற சிறந்த பேட்ஸ்மன் தொடக்கத்திலே களமிறங்கி விளையாட வேண்டும். தோனி 4வது அல்லது 5வது இடத்தில் களமிறங்கிய விளையாட வேண்டும். அதேபோல் சிஎஸ்கே பவுலிங்கிலும் பிரச்சனை இருக்கிறது” என்று கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

தோனி செய்வது மிகப்பெரிய தவறு ; இவரே இப்படி இருந்தா என்ன பண்றது ! கவுதம் கம்பீர் பரபரப்பு பேச்சு 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *