இவரது பந்துவீச்சு அற்புதம். இவர் தான் அணிக்கு தேவை ! - கவுதம் கம்பீர் 1
Gambhir

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு போட்டிகள் முடிவடைந்ததில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது. இதன்மூலம் இந்த தொடர் 2-2 என சமநிலையில் உள்ளது. இதையடுத்து இறுதி போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் நீண்ட காலம் கழித்து அணியில் விளையாடி வருகிறார். இவர் ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரில் பங்கேற்ற முடியாமல் போனது.

இவரது பந்துவீச்சு அற்புதம். இவர் தான் அணிக்கு தேவை ! - கவுதம் கம்பீர் 2

நீண்ட பயிற்சி மேற்கொண்டு உடல்தகுதி தேரிவில் வெற்றி பெற்று தற்போது இங்கிலாந்து டி20 தொடரில் விளையாடி வருகிறார். இவர் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 14 ஓவர்கள் வீசிய 100 ரன்கள் கொடுத்துள்ளார். இதில் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். இதன்மூலம் 7.14 ரன் ரேட் எகானமி வைத்திருக்கிறார்.

இவர் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். இதனால் புவனேஸ்வர் குமாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அந்தவரிசையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் புவனேஸ்வர் குமார் குறித்து பேசியிருக்கிறார்.

இவரது பந்துவீச்சு அற்புதம். இவர் தான் அணிக்கு தேவை ! - கவுதம் கம்பீர் 3

அவர் கூறுகையில் “புவனேஸ்வர் குமார் 4 போட்டிகளில் விளையாடி மொத்தம் 7.14 ரன் ரேட் எகானமி வைத்து சிறப்பாக விளையாடி இருக்கிறார். மேலும் 2 விக்கெட்களையும் வீழீத்தி இருக்கிறார். இது தான் ஒரு பந்துவீச்சாளர் அணிக்கு செய்ய வேண்டியது. இதை புவனேஸ்வர் குமார் சிறப்பாக செய்து வருகிறார். இவர் கடுமையான சூழ்நிலையில் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். டெத் ஓவர்களில் பந்துவீசுவதில்  புவனேஸ்வர் குமார் வல்லவர். நீண்ட காலம் கழித்து விளையாடினாலும் இவரது பார்ம் பழையபடியே இருக்கிறது” என்று கூறியுள்ளார் கவுதம் கம்பீர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *