இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் இடத்தில் இவர்தான் விளையாட வேண்டும் ! போட்டுத்தாக்கும் கவுதம் காம்பீர் !
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை 24ஆம் தேதிக்கு மேல்தான் மைதானத்தில் தொடங்கப் போகிறது. அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்து, திடீரென 36 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்து மோசமான முறையில் தோல்வி அடைந்தது.

இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் ரசிகர்கள் மீளவில்லை. இந்நிலையில் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த உடன் இந்தியாவிற்கு திரும்புகிறார். அவருக்கு பதிலாக அஜின்கியா ரஹானே கேப்டனாக செயல்பட போகிறார். இரண்டாவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமான போட்டி என்றால் பலரும் பல வீரர்களை விராட் கோலி இடத்தில் களமிறங்க அறிவுரை கூறி வருகின்றார்.

இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கவுதம் காம்பீர் கூறுகையில் “ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பிரித்வி ஷா இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏனெனில் அவர் ஏற்கனவே 4 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் இரண்டு அரை சதம் அடித்திருக்கிறார். அதுவும் கடினமான நியூசிலாந்து தொடரில் ஒரு அரைசதம் எடுத்திருந்தார்.

இதன் காரணமாக அவர் முதல் போட்டியில் ஆடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது அவர் பார்மில் இல்லை என்பதில் சந்தேகமில்லை. இதன் காரணமாக அவரது நம்பிக்கை தற்போது குறைந்து விட்டது. எனவே மெல்போர்ன் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக சுப்மன் கில் களமிறங்க வேண்டும். புஜாரா மூன்றாவது இடத்தில் ஆடுவார். அதனைத் தொடர்ந்து விராட் கோலியின் இடத்தில் அஜின்கியா ரகானே களமிறங்க வேண்டும்.

ஐந்தாவது இடத்தில் அவர் விளையாடுவது நன்றாக இருக்காது. ஏனெனில் அவர் தற்போது கேப்டன் அணியை முன்னெடுத்து செல்ல வேண்டும். எனவே விராட் கோலியின் இடத்தில் அஜின்கியா ரஹானே தான் விளையாட வேண்டும். அதனை தொடர்ந்து லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் என அடுத்தடுத்து வந்தால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார் கவுதம் கம்பீர்.