நான் பார்த்த மிக மோசமான பேட்ஸ்மேன் இந்த இந்திய வீரர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 1

நான் பார்த்த மிக மோசமான பேட்ஸ்மேன் இந்த இந்திய வீரர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து

தனது கிரிக்கெட் கேரியரில் தான் பார்த்த மிக மோசமான வீரர் யார் என்பதை முன்னாள் வீரரான கிரன் மோர் ஓபனாக தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்களில் சுனில் கவாஸ்கரும் ஒருவர். தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ள சுனில் கவாஸ்கர், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். மொத்தம் 125 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள கவாஸ்கர் அதில் 51.12 என்ற சராசரி வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 34 சதங்கள் மற்றும் 45 அரைசதங்களுடன் 10,122 ரன்களை குவித்துள்ளார். அதே போல் 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கவாஸ்கர் அதில் 3092 ரன்கள் அடித்துள்ளார்.

நான் பார்த்த மிக மோசமான பேட்ஸ்மேன் இந்த இந்திய வீரர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 2

 

இன்று வரை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களில் சுனில் கவாஸ்கரும் ஒருவர் என நாமெல்லாம் கூறி வரும் நிலையில், வலைபயிற்சியில் கவாஸ்கரை போன்ற மிக மோசமான வீரரை தான் பார்த்ததே கிடையாது என இந்திய அணியின் முன்னாள் வீரரான கிரன் மோர் தெரிவித்துள்ளார்.

நான் பார்த்த மிக மோசமான பேட்ஸ்மேன் இந்த இந்திய வீரர் தான்; முன்னாள் வீரர் அதிரடி கருத்து !! 3

இது குறித்து கிரன் மோர் பேசியதாவது;

சுனில் கவாஸ்கருக்கு வலை பயிற்சி என்பது சுத்தமாக பிடிக்காது. கவாஸ்கரை போன்று வலைப்பயிற்சியில் மிக மோசமாக செயல்பட்ட வீரரை நான் பார்த்ததே இல்லை. வலைபயிற்சியில் அவரது பேட்டிங் ஸ்டைலிற்கும், கிரிக்கெட் போட்டியின் போது அவர் ஆடும் ஆட்டத்திற்கும் சம்பந்தமே இருக்காது. ஆனாலும் கவாஸ்கரின் கூர்நோக்கு திறன் மிகவும் அபாரமானது, இது அவருக்கு கடவுளிடம் இருந்த கிடைத்த மிகப்பெரும் பரிசு என்றே நான் கருதுகிறேன். வலை பயிற்சியில் மோசமாக செயல்பட்டாலும் களத்தில் அவரது பேட்டிங்கை யாரும் குறையே சொல்ல முடியாது” என்று கிரன் மோர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *