கிப்ஸ் தாக்கு :
உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தென்னாப்பிரிக்கா அணியில் நீங்கள் ஆட முடியாது என ஏபி டிவிலியர்ஸ்யை கடுமையாக தாக்கி பேசியுள்ளார் முன்னாள் கேப்டன் கிப்ஸ்.சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடந்து முடிந்துள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 – 1 என இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.
1998 க்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் தென்னாப்பிரிக்கா அடைந்த முதல் டெஸ்ட் தொடர் தோல்வியும் இது தான்.
தென்னாப்பிரிக்கா பரிதாபம் :
இதற்குக் காரணம் அந்த அணியின் பக்கபலம் ஏபி டிவிலியர்ஸ் அணியில் இல்லாததும் ஒரு பெரிய காரணி ஆகும். கடந்த 19 மாதங்களாக அதாவது ஒன்றரை வருடங்களாக அவர் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் அவர் தன்னை முழுமையாக லிமிடெட் ஓவர் கிரிக்கெட் மட்டுமே ஆட தயார் படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை 2019 ஆம் நடக்கவுள்ள ஒரு நாள் உலகக்கோப்பையை மனதில் கொண்டு அதனை வெல்லும் பொருட்டு செயல்பட்டு வருகிறார்.
என்ன செய்கிறார் ஏபி டிவிலியர்ஸ் :
அனைத்து வகையான போட்டுகளிலும் உலகின் மிகச் சிறந்த அணியான தென்னாப்பிரிக்கா இதுவரை ஒரு சர்வதேச அளவிலான கோப்பையை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அவப்பெயரை மாற்றுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஏபிடி ஈடுபட்டுள்ளார் எனத் தெரிகிறது. இதற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ளவே டெஸ்ட் போட்டிகளில் இருந்த விலகியுள்ளார் என தெரிகிறது.
ஆனாலும் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2 – 1 என்ற வகையில் தோல்வியை தழுவியது. டி20 தொடரும் இதேபோல் 2 – 1 என இங்கிலாந்திடம் விட்டது.
கிப்ஸ் விமர்சனம் :
இது போன்ற தொடர் தோல்விகளினால் துவண்டு போய் இருக்கும் அணியை, அந்நாட்டு முன்னாள் வீரர்களும் விட்டு வைக்கவில்லை. பல்வேறு விமானங்களையும் பல்வேறு தரப்பினரும் வைத்து வருகின்றனர். அதே போல் தான் முன்னாள் அதிரடி வீரர் ஹர்சலோ கிப்ஸ் சற்று கடுமையாக ஏபி டிவிலியர்ஸ்யை சாடியுள்ளார். இது போன்ற தோல்விகளுக்கு ஏபிடியின் இல்லாமையே காரணம். அவருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு விளையாட கூடாது, அணியின் தேவைக்கேற்ப அவர் தேவைக்கேற்ப விளையாட வேண்டும். என தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஏபி டிவிலியர்ஸ்யை பற்றி ஊடகத்தில் கேப்டன் ஃபாஃப் டு ப்லெஸ்சிஸ் “அவர் அணிக்காக விளையாடுவது அவருடைய விருப்பம், அப்படியான நிலையை அவர் அடைந்துள்ளார். அணிக்கு அவர் எப்போதும் வரலாம். அவரை நாங்கள் வரவேற்போம்” என பேட்டியில் கூறியுள்ளார். இதனை பார்த்த கிப்ஸ் இது என்னடா தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு வந்த சோதனை என வேதனை பட அந்த ஃபாஃப் டு ப்லெஸ்சிஸ் பேட்டியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Interesting article this..captain putting a player on a pedestal! Never thought I'd see this..anyway pic.twitter.com/F6u17j0sVD
— Herschelle Gibbs (@hershybru) August 11, 2017
அதனை பதிவிட்டு அவர் ” தவறு செய்த ஒரு வீரருக்கு அவருடைய கேப்டன் முட்டு கொடுத்து காப்பாற்ற நினைப்பதை இது போல் நான் எங்கும் கண்டதில்லை” என விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் ஆல்ரவுண்டர் ஜாக்குவஸ் காலிஸ் ஏபிடி செய்ததை விட அதிகமாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட்ற்கு செய்துள்ளார்.
Kallis achieved more than ab ever will but he kept on playing and never disrespected the team and the game.remember that
— Herschelle Gibbs (@hershybru) August 11, 2017
அவர் நினைத்ததை போல் அவர் அவர் தனது விருப்பத்திற்கு ஒன்றும் செய்துவிடவில்லை. அவருடைய கேப்டன் ஸ்மித்தும் இவ்வாறாக அவருக்கு தவறாக முட்டு கொடுத்தது இல்லை. என ட்விட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.