மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டியில் சச்சின் என்னை ஸ்லெட்ஜ் செய்ததாக மெக்ராத் பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் பற்றி நீங்கள் பேசினால், மனதில் தோன்றிய முதல் விஷயம் எளிமையானவர் மற்றும் விளையாட்டின் மிகப்பெரிய ஜாம்பவான்களில் ஒருவராக இருப்பார் என்பது தான். டெண்டுல்கர் எதிரணியுடன் சண்டையிடும் குணத்தை நீங்கள் நினைத்துக்கூட பார்க்க இயலாது. காரணம், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் பெரும்பகுதியை, அவர் பேட் பேசுவதை தான் அனைவரும் பார்திருப்பர். எனினும், அவர் சில சந்தர்ப்பங்களில் எதிரணியுடன் சண்டையிட்டு இருக்கிறார். 2000 ஆம் ஆண்டு, தன்னுடன் சச்சின் ஸ்லெட்ஜ் செய்ததை மெக்ராத் தெரிவித்துள்ளார்.

ஸ்பொட்ஸ்கேடாவுடன் ஒரு பிரத்யேக நேர்காணலின் போது, மெக்ராத், இது தன்னுடைய நாள் என்று டெண்டுல்கர் எப்படி நினைவுபடுத்தினார் என்பதை வெளிப்படுத்துகிறார்.
வழக்கமாக மிகவும் மெளனமான நபர் டெண்டுல்கர், அன்று மெக்ராத் பந்துவீசுகையில் டெண்டுல்கர் இறங்கி வந்து திட்டிக்கொண்டே சிக்ஸர் அடித்தார். அது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. ஆனால், அவர் திட்டயதை எத்தனைபேர் கவனித்தார்கள் என்பது தெரியவில்லை.
இது நடந்தது ICC நாக்அவுட் டிராபியின் கால் இறுதிப் போட்டியின் போது. 2000 ஆம் ஆண்டு கென்யாவில் நடைபெற்ற போட்டியில் நிகழ்ந்தவை. இந்தியா முதலில் பேட்டிங் செய்து, சச்சினுக்கு சாதகமான நாளாக அமைந்தது. மெக்ராத் ஓவரில் சச்சின் 3 சிக்சர்களை அடித்தார்.

சச்சின் டெண்டுல்கரை பார்க்கும் போது க்ளென் மெக்ராத் அந்த சமயத்தை நினைவு கூறுகிறார்..
“சாம்பியன் டிராபி 2000, நான் சச்சினுக்கு ஷாட் பந்து வீசினேன், அவர் அதை அடித்தார். பந்து நேராக மேலே ஏறியது, நான் கீப்பர் அதை பிடிக்க போகிறார் என்று நினைத்தேன், மற்றும் ஒரு காற்று தாக்கமும் இருந்தது, அது மேலும் பின்னோக்கி சென்றது, மற்றும் நான் பின்னால் இருப்பவர் பிடிப்பார் என எண்ணினேன். ஆனால், பந்து இறுதியில் சிக்ஸர் ஆக மாறியது. பின்னர் சச்சின் எல்லா இடங்களிலும் என் பந்தை அடித்து நொறுக்கினார், அவர் ஓரிரு வார்த்தைகளை கூறினார். அவர் என்னை நோக்கி ஸ்லெட்ஜ் செய்தார். அது வழக்கத்திற்கு மாறாக இருந்தது. அதற்கு முன்னதாக அவர் அப்படி நடக்கவில்லை. இது சச்சின் நாள், நம்பிக்கையோடு அவர் அதை எனக்கு தெரியப்படுத்தினார்” என மெக்ராத் தெரிவித்தார்.