நான் எதிர்கொண்டதிலேயே இவரது பந்துவீச்சு தான் எனக்கு கடும் சவாலாக இருந்தது! ராகுல் டிராவிட் அதிரடி பேச்சு!
இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று பெயர் பெற்றவர் ராகுல் டிராவிட். பல சூழ்நிலைகளில் நங்கூரமாக நின்று அணியை காப்பாற்றியவர். இவரது காலகட்டத்தில் பல ஜாம்பவான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டுதான் என இரண்டு விதமான போட்டிகளிலும் பத்தாயிரம் ரன்கள் குவிததார்.
அதிலும் இப்படிப்பட்ட வீரர்களை எதிர்கொண்டுதான். கிளன் மெக்ராத், வாசிம் அக்ரம் வக்கார், யூனிஸ் சமிந்தா, வாஸ் முத்தையா முரளிதரன், லசித் மலிங்கா, டேல் ஸ்டெயின், ஷேன் வார்னே என இவரது காலத்தில் இருந்தவர்கள் எல்லாம் மிகவும் திறமையான அதிவேகமாக பந்து வீச கூடிய பந்துவீச்சாளர்கள்.
ஆனால் ராகுல் டிராவிட் இவர்களை எல்லாம் எதிர்த்த தான் பல ஆயிரம் ரன்கள் குவித்தார். இந்நிலையில் தான் எஎதிர்கொண்டதிலேயே யார் மிகவும் சிறப்பு வாய்ந்த கடினமான பந்துவீச்சாளர் என்பது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் ..
வேகப்பந்து வீச்சாளர்களை பொருத்தமட்டில் கிளன் மெக்ராத்தை எதிர்கொள்வதுதான் எனக்கு மிகவும் கடுமையான தலைவலியாக இருந்தது. அவரை எதிர் கொள்வது மிகவும் சிரமம். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தபோது அவரை எதிர்கொண்டு நான் ஆடியிருக்கிறேன்.
உண்மையாகவே அவர் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவர் நல்ல பார்மில் இருக்கும் போது பந்து வீசினால் அவரிடமிருந்து ஸ்டம்புகளை காப்பாற்றுவது மிகவும் கடினம். ஒரு பந்து கூட எளிதாக வராது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருப்பார். முதல் ஓவர், இரண்டாவது ஓவர், ஏன் 25ஆவது ஓவர் வீசும் போதும் கூட ஆக்ரோஷமமாகவே அவர் பந்து வீசுவார் என்று புகழ்ந்து பேசியுள்ளார் ராகுல் டிராவிட்.