நியூசிலாந்த அசால்டா அடிக்கிற அளவு திறமை நம்ம கிட்ட இருக்கலாம்... ஆனா அதுக்காக ஆஸ்திரேலியாவ ஈசியா அடிச்சிற முடியாது; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர் !! 1
நியூசிலாந்த அசால்டா அடிக்கிற அளவு திறமை நம்ம கிட்ட இருக்கலாம்… ஆனா அதுக்காக ஆஸ்திரேலியாவ ஈசியா அடிச்சிற முடியாது; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர்

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியுடனான இறுதி போட்டி இந்திய அணிக்கு அதிக சவால் நிறைந்த போட்டியாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணியும், தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

நியூசிலாந்த அசால்டா அடிக்கிற அளவு திறமை நம்ம கிட்ட இருக்கலாம்... ஆனா அதுக்காக ஆஸ்திரேலியாவ ஈசியா அடிச்சிற முடியாது; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர் !! 2

சாம்பியனை தீர்மானிக்கும் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி 19ம் தேதி அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சமபலம் கொண்ட இரு அணிகள் இடையேயான இறுதி போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல போவது யார் என்ற விவாதமே ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் நிலவி வருகிறது. இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இறுதி போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போன்று இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் முன்னாள் வீரர்கள் பலர் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

நியூசிலாந்த அசால்டா அடிக்கிற அளவு திறமை நம்ம கிட்ட இருக்கலாம்... ஆனா அதுக்காக ஆஸ்திரேலியாவ ஈசியா அடிச்சிற முடியாது; இந்திய அணியை எச்சரித்த முன்னாள் வீரர் !! 3

அந்தவகையில், இறுதி போட்டி குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான விஸ்வநாத், இறுதி போட்டி இந்திய அணிக்கு அதிக சவால் நிறைந்த போட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து விஸ்வநாத் பேசுகையில், “ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவானதாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களான டேவிட் வார்னர் மற்றும் டர்வீஸ் ஹெட் ஆகியோரால் எப்படிப்பட்ட பந்துவீச்சாளர்களை சமாளித்து அதிரடியாக விளையாட முடியும். அதன்பிறகு மிட்செல் மார்ஸ், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் என ஆஸ்திரேலிய அணியில் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் பலர் உள்ளனர். எனவே இந்திய அணி இலகுவாக இறுதி போட்டியில் வெற்றி பெறும் என யாராலும் சொல்லிவிட முடியாது. இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் என்பது தான் எனது விருப்பம், ஆனால் மற்ற அணிகளை வீழ்த்தியதை போன்று இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இலகுவாக வீழ்த்த முடியாது என்பதே எனது கருத்து. ஆஸ்திரேலிய அணிக்கு ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தாலும் அதை அவர்கள் விட்டுவிடவே மாட்டார்கள், கிடைக்கும் வாய்ப்புகளை தங்களால் முடிந்தவரை ஆஸ்திரேலிய வீரர்கள் சரியாக பயன்படுத்தி கொள்வார்கள். இது ஆஸ்திரேலிய வீரர்களின் இயல்பு.  கடைசி பந்து வரை ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதால் இந்திய அணிக்கு இறுதி போட்டி அதிக சவால் நிறைந்த போட்டியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *