தனது கனவு அணியை தேர்வு செய்த முன்னாள் வீரர் ஸ்வான்; ஒரே ஒரு இந்திய வீரருக்கு அணியில் இடம்
சர்வதேச கிரிக்கெட் கவுண்சில் (ஐசிசி) கிரிக்கெட் ரசிகர்களிடம் இனி வாழ்நாளில் தாங்கள் பார்க்க விரும்பும் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து தெரிவிக்கும் படி ஒரு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டது. இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களின் சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து பதில் அளித்து வருகின்றனர்.
If you had to pick a team that you would watch for the rest of your life, what would it be?
1. ______
2. ______
3. ______
4. ______
5. ______
6. ______
7. ______
8. ______
9. ______
10. ______
11. ______Go ? pic.twitter.com/LzZ3M0Sauc
— ICC (@ICC) March 29, 2020
இதைப்பார்த்த முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் கிரேம் சுவான் தனது சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து பதிவிட்டுள்ளார். இவரின் அணியில் ஐந்து இங்கிலாந்து வீரர்கள், மூன்று ஆஸ்திரேலியர்கள், ஒரு இந்தியர், ஒரு பாகிஸ்தான் வீரரும் இடம் பெற்றுள்ளனர்.
1.Milburn
2.Crowe
3.Bradman
4.Mark Waugh
5.Tendulkar
6.Botham
7.Knott
8.Warne
9.Larwood
10.Akram
11.Anderson— Graeme Swann (@Swannyg66) March 29, 2020
சுவான் தனது அணியில் மில்பர்ன் மற்றும் க்ரோ ஆகியோரை துவக்க வீரர்களாகவும், ஆஸ்திரேலியாவின் பிராட்மேன், மார்க் வாக் ஆகியோரை மூன்றாவது, நான்காவது வீரர்களாகவும், இந்திய ஜாம்பவான் சச்சினை ஐந்தாவது வீரராகவும் தேர்வு செய்துள்ளார்.

இவர்களை தொடர்ந்து ஆல் ரவுண்டர் இடத்துக்கு போத்தமும் விக்கெட் கீப்பராக நாட்டையும் தேர்வு செய்துள்ளார். மேலும் வேகப்பந்துவீச்சாளர்கள் இடத்தில் லார்வுட், அக்ரம், ஆண்டர்சன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். சுழற்பந்துவீச்சாளராக ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னை தேர்வு செய்துள்ளார்.