வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கீப்பர் சாய் ஹோப்பின் மிகப்பெரிய தவறால் ஸ்டம்ப்பிங்கில் இருந்து தப்பினார் எம் எஸ் தோனி.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில், 37 வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரு அணிகளும் மோதுகின்றன இது இந்திய அணிக்கு ஆறாவது லீக் போட்டி ஆகும்.
இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனால் துவக்க வீரர்களாக கே எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். நிதானமாக ஆடிய ரோகித் சர்மா கெமர் ரூச் பந்தில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கடந்த இரண்டு போட்டிகளை போல அல்லாமல் சற்று பொறுப்புடன் ஆடிய கே எல் ராகுல் துரதிஸ்டவசமாக 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தது அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். பின்னர் வந்த விஜய் சங்கர் இந்த போட்டியிலும் எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை. வெறும் 14 ரன்களுக்கு எளிதான முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கேதர் ஜாதவ் தனது மோசமான பேட்டிங்கை தொடர்ந்து வருகிறார். இந்தப் போட்டியிலும் 10 பந்துகள் பிடித்து வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறி ஏமாற்றினார். வழக்கம்போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் அடித்து இருக்கையில், ஜேசன் ஹோல்டர் பந்தில் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி சற்று தடுமாறியது.
கேதார் ஜாதவ் ஆட்டமிழந்த பிறகு களம் கண்ட எம் எஸ் தோனி துவக்கத்தில் இருந்தே தடுமாற்றம் கொண்ட ஆட்டத்தை ஆடி வந்தார். 34வது ஓவரில் ஃபேபியன் வீசிய பந்தில் இறங்கி அடிக்க முயற்சி செய்த தோனி, பந்தை மிஸ் செய்ய, ஸ்டம்ப்பிங் செய்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது.
ஆனால், இந்த அறிய வாய்ப்பை சாய் ஹோப் தவறவிட்டார். இதனால இந்திய ரசிகர்கள் இடையே நிம்மதி பெருமூச்சாக இருந்தது.
வீடியோ:
https://twitter.com/Er_ASP/status/1144216251004145664?s=19
தற்போது இந்திய அணி 42 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரங்களுடன் ஆடி வருகிறது.