இங்கிலாந்து அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான ஜாக் லீச் இந்திய அணியை வெற்றி கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற பிப்ரவரி 5 நடக்க உள்ளது.

பௌலிங் பிட்ச் எனப்படும் பவுலர்களுக்கு ஏற்ற மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் தனது திறமையை வெளிப்படுத்துவதுசற்று சவாலாக இருக்கும், அந்த வகையில் இரு அணிகளிலும் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர், குறிப்பாக இந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமையும்.
இந்நிலையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த இடது கை சுழல் பந்துவீச்சாளரான ஜாக் தெரிவித்ததாவது, கிரிக்கெட் போட்டியை நான் பெரிதும் விரும்புகிறேன் மேலும் இந்தியாவுக்கு சென்று இந்திய அணி எதிர்ப்பது எனக்கு இதுதான் முதல் முறை என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் பந்து வீச வேண்டும் என்பது எனது கனவு .
இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு நான் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது எதற்காக நான் இங்கிலாந்து அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேனோ அந்த வேலையை இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செய்வேன் என்று அவர் தெரிவித்தார்