இந்திய அணியின் பல சோதனைகளுக்கு சேப்பல் தான் காரணம்; கங்குலி
முன்னாள் பயிற்சியாளர் கிரேக் சேப்பல், தான் பயிற்சியாளராக இருந்த காலத்தில் இந்திய அணியை தவறாக வழிநடத்தியதால் அப்போதைய இந்திய அணி பல சோதனைகளை சந்தித்தது என்று கங்குலி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய கிரிக்கெட் அணி உலகின் தலைசிறந்து விளங்கி வருவதற்கு தோனி எப்படி மிக முக்கிய காரணமோ அதே போல் இந்திய அணியை உருவாக்கியதால் முன்னாள் கேப்டன் கங்குலியின் பங்கும் மிக முக்கியமானது. தோனி, கோஹ்லி உள்பட பலர் கங்குலியின் உதவியால் மட்டுமே இந்திய அணியில் இடம்பெற்றனர், அவர்களுக்கு கங்குலி தற்போது வரை பக்கபலாமாக இருந்து வருகிறார்.
கங்குலி விளையாடிய காலத்தில், இந்திய அணியை கங்குலி சிறப்பாகாவே வழிநடத்தி சென்று கொண்டிருந்த போது, கடந்த 2015ம் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த க்ரேக் சேப்பலுக்கும் கங்குலிக்கும் இடையே பணிப்போரே நடைபெற்றது.
இதன் விளைவாக கங்குலி திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். கங்குலி திடீரென நீக்கப்பட்டு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டது அப்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கங்குலி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அப்போதைய இந்திய அணி பல சோதனைகளை சந்தித்ததற்கும் பயிற்சியாளர் சேப்பல் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தான் காரணமின்றி திடீரென கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேசிய கங்குலி “கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதோடு நில்லாமல், என்னை ஒரு சாதாரண வீரராக கூட தன்னை களமிறக்கப்படாதது மன்னிக்கவே முடியாதது என கங்குலி தெரிவித்துள்ளார், அந்த சம்பவம் தன்னை ஆத்திரமுற செய்ததாகவும், அதை நினைத்துக் கூட பார்க்க விரும்பவில்லை என்று தெரிவித்த கங்குலி கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.