டெல்லி கேப்பிடல் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் டெல்லி அணி பவர் பிளேயில் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற 2022 ஐபிஎல் தொடர் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக கருதப்படும் டெல்லி கேப்பிடல் அணி, இந்த தொடரில் பேட்டிங்கில் சற்று சொதப்பி வருவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் டெல்லி அணிக்கு அறிவுரை வழங்குகின்றனர்.

குறிப்பாக டெல்லி கேப்பிடல் அணி தான் எதிர்கொண்ட இரண்டு போட்டிகளிலுமே(மும்பை இந்தியன்,குஜராத் டைட்டன்ஸ்) பவர் பிளேயில் மிகவும் மோசமாக பேட்டிங் செய்தது.
மீண்டும் மீண்டும் டெல்லி அணி இதே தவறு செய்யும் பட்சத்தில் டெல்லி அணிக்கு அது மிகவும் பாதகமாக அமைந்துவிடும் என்று டெல்லி அணிக்கு பலர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
டெல்லி அணி பேட்டிங் குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்
அந்தவகையில் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பவர் பிளேயில் டெல்லி அணி செய்த தவறை சுட்டிக்காட்டி அறிவுரை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், துர்காஷ்டகம் ஆக குஜராத் அணிக்கு எதிரான 2வது போட்டியில் தோல்வியைத் தழுவி விட்டோம், (முதல் கோணல் முற்றிலும் கோணல்) என்பதுபோல் பவர் பிளேயில் மிக சீக்கிரமாக 3 விக்கெட்களை இழந்து விட்டோம், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா லக்கி பெர்குசனை மிக சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.லக்கி தனக்கு கொடுத்த வேலையை மிக சிறப்பாக செய்துள்ளார்.மேலும் டெல்லி அணி இப்படி பவர் பிளேயில் ரன்கள் குவிக்காமல் சீக்கிரம் விக்கெட்டை இழந்தால் போட்டியில் வெற்றி பெறுவது என்பது மிகவும் கடினமாகிவிடும்,இதனை சரி செய்யவேண்டும், முதலிலேயே சிறந்த துவக்கத்தை கொடுக்க வேண்டும் என்று டெல்லி அணிக்கு அறிவுரை கொடுத்துள்ளார்.