ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகிய கே.எல் ராகுல்... உடனடியாக மாற்று வீரரை அறிவித்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி !! 1
ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகிய கே.எல் ராகுல்… உடனடியாக மாற்று வீரரை அறிவித்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கே.எல் ராகுலுக்கு பதிலாக கருண் நாயர் அணியில் சேர்க்கப்படுவதாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்கியது.

ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகிய கே.எல் ராகுல்... உடனடியாக மாற்று வீரரை அறிவித்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி !! 2

மொத்தம் 70 லீக் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை கிட்டத்தட்ட 50 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. கடந்த தொடர்களை விட இந்த தொடர் முற்றிலுமாக மாறுபட்டதாகவே உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கு அனைத்து அணிகளுமே கடுமையாக போட்டி போட்டு வருகின்றன. எந்த எந்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதை கணிக்கவே முடியாத அளவிற்கு நடப்பு தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் குஜராத் அணிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் கே.எல் ராகுல் தலைமையிலான ல்க்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி இருக்கும் நிலையில், அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அந்த அணியின் கேப்டனான கே.எல் ராகுல் நடப்பு தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகிய கே.எல் ராகுல்... உடனடியாக மாற்று வீரரை அறிவித்தது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி !! 3

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் விளையாடாத கே.எல் ராகுல், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே போல் காயத்தால் விலகிய கே.எல் ராகுலிற்கு பதிலாக முச்சத நாயகன் கருண் நாயர் லக்னோ அணியில் சேர்க்கப்படுவதாகவும் லக்னோ நிர்வாகவும் அறிவித்துள்ளது.

கருண் நாயர் இதுவரை 76 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அதில் 1496 ரன்கள் குவித்துள்ளார். நடப்பு தொடருக்கான ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத கருண் நாயரை அவரது அடிப்படை விலையான 50 லட்சம் ருபாய்க்கே லக்னோ அணி தனது அணியில் இணைத்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *