அர்ஜுன் டெண்டுல்கரை விட்டுக்கொடுக்காத ரோகித் சர்மா... மும்பை பவுலிங்... பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? - விபரம் உள்ளே! 1

குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

அர்ஜுன் டெண்டுல்கரை விட்டுக்கொடுக்காத ரோகித் சர்மா... மும்பை பவுலிங்... பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? - விபரம் உள்ளே! 2

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தனது சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவிய பிறகு இன்றைய போட்டிக்கு வந்திருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி இப்போட்டிக்கு வந்திருக்கிறது.

புள்ளிப்பட்டியலை பொருத்தவரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஆறு போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில், 10 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு முன்னேறலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில், 8 புள்ளிகள் பெற்று நல்ல முன்னேற்றம் காணலாம்.

அர்ஜுன் டெண்டுல்கரை விட்டுக்கொடுக்காத ரோகித் சர்மா... மும்பை பவுலிங்... பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? - விபரம் உள்ளே! 3

குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்):

விருத்திமான் சாஹா(கீப்பர்), ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவாட்டியா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது, மோகித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் (பிளேயிங் லெவன்):

ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(கீப்பர்), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, குமார் கார்த்திகேயா, அர்ஜுன் டெண்டுல்கர், ரிலே மெரிடித், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்

அர்ஜுன் டெண்டுல்கரை விட்டுக்கொடுக்காத ரோகித் சர்மா... மும்பை பவுலிங்... பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? - விபரம் உள்ளே! 4

இம்பாக்ட் வீரர்கள் விபரம்:

குஜராத் டைட்டன்ஸ் சப்ஸ்: 

ஜோசுவா லிட்டில், தசுன் ஷனகா, சிவம் மாவி, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ஸ்ரீகர் பாரத்

 

அர்ஜுன் டெண்டுல்கரை விட்டுக்கொடுக்காத ரோகித் சர்மா... மும்பை பவுலிங்... பிளேயிங் லெவனில் என்னென்ன மாற்றங்கள்? - விபரம் உள்ளே! 5

மும்பை இந்தியன்ஸ் சப்ஸ்: 

ரமன்தீப் சிங், திலக் வர்மா, ஷம்ஸ் முலானி, விஷ்ணு வினோத், சந்தீப் வாரியர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *