கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 59 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார்.

கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் 59 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த வருட சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் தக்கவைத்துக் கொள்ளும் வீரர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் டாலர் (இந்திய பண மதிப்பில் ரூ. 1,04,28,800) நிர்ணயிக்கப்பட்டது. இந்த தொகையில் சோஹைல் தன்வீர், அந்த்ரே ரஸல், கிறிஸ் கெய்ல், வெயின் பிராவோ ஆகியோர் தக்கவைத்துள்ளனர்.

அதன்பின் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் அடிப்படை விலையான 90 ஆயிரம் டாலர் (ரூ. 58,66,200) விலைக்கு பார்படோஸ் டிரினிடாட் அணி ஏலம் எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் சிம்மன்ஸை 70 ஆயிரம் டாலர் கொடுத்து செயின்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

Photo by Shaun Roy/ IPL/ SPORTZPICS
ஊக்க மருந்து விவகாரத்தில் கடந்த ஆண்டு சீசனில் விளையாடாத அந்த்ரே ரஸல் இந்த சீசனில் ஜமைக்கா தல்லாவாஸ் அணிக்காக விளையாடுகிறார். 6 அணிகள் 108 வீரர்களை ஏலம் எடுத்துள்ளது. இதில் 61 வீரர்கள் தக்கவைத்துள்ளனர். 47 வீரர்கள் இந்த வருட ஏலம் மூலம் எடுக்கப்பட்டனர்.