இன்ஸ்டாக்ராம் பக்கத்தை கவனிக்காமல் பதிவிட்டு விட்டேன் ; என்னை மன்னித்துவிடுங்கள் திடீரென மன்னிப்பு கேட்ட ஹர்பஜன் சிங் 1

ஹர்பஜன் சிங் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் தவறுதலாக ஒரு பதிவு இட்டுள்ளார். அந்தப் பதிவில் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த தலைவரான ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவின் 37வது ஆண்டு நினைவஞ்சலியை புகழ்ந்து பேசி உள்ளபடி வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.

இது அனைத்து இந்திய ரசிகர்களையும் கோபப்படுத்தியது. ஹர்பஜன் சிங் மீது கடும் கண்டனக் குரல் எழுந்தது. இதனையடுத்து ஹர்பஜன் சிங் விரைந்து அந்த பதிவை தனது இன்ஸ்டகிரம் வலைத்தளத்தில் இருந்து நீக்கிவிட்டார். மேலும் தற்பொழுது அவர் மனம் உருகி மன்னிப்பும் கேட்டுள்ளார்

இன்ஸ்டாக்ராம் பக்கத்தை கவனிக்காமல் பதிவிட்டு விட்டேன் ; என்னை மன்னித்துவிடுங்கள் திடீரென மன்னிப்பு கேட்ட ஹர்பஜன் சிங் 2

யார் இந்த ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா

இவர் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் ஆவார்.இவர் தனி வகித்த காலிஸ்தான் இயக்கம், சீக்கியர்களுக்கு தனிநாடு அறிவிக்கவேண்டும் என்று போராடி வந்தது. இது மிகவும் தவறு என்று கருதிய முன்னாள் பிரதமர் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்கிற ஒரு ராணுவ அமைப்பை உருவாக்கினார்.

அதன்படி, 1984-ம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் எனப்படுகிற ஒரு ராணுவ குழு இவரை அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் வைத்து கொன்றது. இவரை மட்டுமின்றி இவருடன் இருந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களையும் கொன்றது. மேலும் இயக்கத்தைச் சேர்ந்த ஒரு சிலரை அங்கே வைத்து கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மனமுருகி மன்னிப்பு கேட்டுள்ளார் ஹர்பஜன் சிங்

இந்நிலையில் தான் அந்த பதிவை வேண்டுமென்றே போடவில்லை என்றும் தனக்கு வாட்ஸ்அப்’பில் இந்த செய்தி வந்தது என்றும், தவறுதலாக இதை கவனிக்காமல் நான் பதிவிட்டு விட்டேன் என்றும் கூறியுள்ளார். நான் செய்தது மிகப் பெரிய தவறு நான் சற்று கவனமாக இருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் நான் ஒரு சீக்கியர், இந்தியாவுக்கு மட்டுமே ஆதரவு தரக்கூடிய ஒரு சீக்கியர். நான் எப்பொழுதும் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறார் தேசிய விரோத செயலுக்கு துணை போக மாட்டேன் என்றும் கூறியுள்ளார். அதேபோல தனது இரத்தமும் வியர்வையும் இந்தியாவுக்கு மட்டும் தான் நான் சிந்தி இருக்கிறேன் என்றும் எப்பொழுதும் நான் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் எந்த தனி சார்பு இயக்கத்திற்கும் ஆதரவு அளிக்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

இறுதியாக, நான் தவறுதலாக செய்த இந்த செயலுக்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி மன்னிப்பும் கேட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *