ஐசிசி தலைமையில் நடக்கும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும் மனம் திறக்கிறார் ஹர்பஜன்சிங்.
உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான இந்திய அணி தற்போது விராட் கோலியின் தலைமையின் கீழ் இயங்குகிறது. விராட் கோலி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து போட்டியிலும் மிகச்சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகளைப் படைத்துள்ளார்.பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி இன்னும் பல சாதனைகளை படைக்க உள்ளார்.

இருந்தபோதும் இவர் தலைமையிலான இந்திய அணி இதுவரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் ஒரு முறை கூட கோப்பையை வென்றது இல்லை.
இது பற்றி இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியதாவது விராட் கோலி ஒரு மிகச்சிறந்த வீரர் இவருடைய அதிரடியான ஆட்டம் பிரமிப்பூட்டும் வகையில் இருக்கும் இவருடைய தெளிவான முடிவு பொறுப்பான ஆட்டமும் இந்திய அணி பலமுறை வெற்றியின் பாதையில் அழைத்துச் சென்றுள்ளது.

இருந்தபோதும் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இதுவரை ஒருமுறைகூட ஐசிசி நடத்தும் தொடர்களில் கோப்பையை வென்றது கிடையாது.
ஆனால் அந்த நாள் மிக தொலைவில் இல்லை, விரைவிலேயே விராட் கோலி அந்தக் குறையையும் போக்குவார் என்று அவர் கூறினார்.

2021 நடக்கும் டி20 உலக கோப்பை விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நிச்சயம் வெல்லும் அதற்கான அனைத்து தகுதியும் இந்திய அணிக்கு உள்ளது என்று அவர் கூறியுள்ளார். 2017 சம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி மற்றும் 2019 உலக கோப்பை அரையிறுதி போட்டிகளில் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 இப்போட்டியில் இந்திய அணி 2- 1 என்ற புள்ளி பட்டியல் அடிப்படையில் அபாரமாக ஆடி வெற்றியை பெற்றது இதன் மூலம் இந்திய அணி தனது பலத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டது.

இந்திய அணிக்கு மிகச்சிறந்த பவுலர்கள் பந்துவீச்சாளர்கள் பலர் உள்ளனர். இதற்கு ஐபிஎல் போட்டித் தொடர் மிக முக்கியப் பங்கு வகித்தது உலக அளவில் இந்தியா டி20 போட்டிகளில் மிகவும் வலிமையான அணி என்று அவர் கூறினார்.