ஓய்வு எப்போது? அறிவித்த ஹர்பஜன்சிங்! சோகமான சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்!
இந்திய அணிக்காக 1997-ம் ஆண்டு முதல் ஆடி வருபவர் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். இளம் வயதிலேயே சவுரவ் கங்குலியின் தலைமையில் விளையாடி பல போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர். இந்நிலையில் 40 வயதான இவர் வெகு சீக்கிரம் ஓய்வு பெற்றுவிடுவார் என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்போது இதனை எல்லாம் தூசு தட்டி பேசியுள்ளார் ஹர்பஜன்சிங். அவர் கூறுகையில்..
நீங்கள் என் திறமையை எப்போது வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம். நீங்கள் கருதும் சிறந்த வீரரை என் முன் நிறுத்துங்கள். அவரது திறமையுடன் நான் போட்டியிட தயார். பந்தை பிடிக்கும் போது கால்களுக்கு இடையில் பந்தை விட்டாலோ, அல்லது குனிய முடியாமல் பந்து போய் விட்டாலும் அதன் பின்னர் எனது தகுதியைப் பற்றி பேசலாம்.
நான் இந்திய அணியின் சீருடை அணிந்து 800 நாட்களுக்கு மேல் களத்தில் நின்று விளையாடி உள்ளேன். நான் சாதனை படைத்த எனக்கு யாருடைய அனுதாபமும் தேவைப்படுவதில்லை. எனக்கு வயதாகிவிட்டது என்று நினைக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.
அசாருதின் கேப்டனாக இருக்கும் போதே இந்திய அணிக்காக விளையாட துவங்கினேன். 20 ஆண்டுகாலம் விளையாடிவிட்டு இதுதான் எனது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். எனது உடல் நிலையைப் பொறுத்துதான் முடிவு எடுப்பேன். 2013ஆம் ஆண்டு எப்படி 24 விக்கெட்டுகள் வீழ்த்தினேனோ அதுபோன்றே தற்போதும் இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ஹர்பஜன்சிங். இவர் சொல்வதைப் பார்த்தால் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குமேல் சகஜம் சிங் விளையாடுவார் என்று தெரிகிறது.