சந்தேகமே வேண்டாம்... இந்த டீம் தான் சாம்பியன்; அதிக சிக்ஸர், அதிக ரன்கள் எடுக்க போவது இவர்கள் தான்; ஹர்பஜன் சிங் கணிப்பு !! 1
சந்தேகமே வேண்டாம்… இந்த டீம் தான் சாம்பியன்; அதிக சிக்ஸர், அதிக ரன்கள் எடுக்க போவது இவர்கள் தான்; ஹர்பஜன் சிங் கணிப்பு

ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ள வீரர் யார்..? அதிக விக்கெட் எடுக்க போவது யார்..? என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

அக்டோபர் 5ம் தேதி சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது.  உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சந்தேகமே வேண்டாம்... இந்த டீம் தான் சாம்பியன்; அதிக சிக்ஸர், அதிக ரன்கள் எடுக்க போவது இவர்கள் தான்; ஹர்பஜன் சிங் கணிப்பு !! 2

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் எதிர்வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், உலகக்கோப்பையில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? அதிக ரன்கள் குவிக்க போகும் வீரர் யார்..? அதிக விக்கெட்டுகள் கைப்பற்ற போகும் வீரர்..? அரையிறுதிக்கு செல்ல போகும் அணிகள் எது..? என்பது குறித்தான தனது கணிப்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.

சந்தேகமே வேண்டாம்... இந்த டீம் தான் சாம்பியன்; அதிக சிக்ஸர், அதிக ரன்கள் எடுக்க போவது இவர்கள் தான்; ஹர்பஜன் சிங் கணிப்பு !! 3

இந்திய அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், ரோஹித் சர்மா அதிக ரன்கள் குவிப்பார் என்றும், குல்தீப் யாதவ் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடர் குறித்தான ஹர்பஜன் சிங்கின் கணிப்புகள் பின்வருமாறு;

அதிக ரன்கள் – விராட் கோலி

அதிக விக்கெட்டுகள் – குல்தீப் யாதவ்

அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ள அணிகள் ; ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து

சாம்பியன் – இந்தியா

தொடர்நாயகன் – சுப்மன் கில்

அதிக சிக்ஸர்கள் – ரோஹித் சர்மா

சர்பரைஸ் கொடுக்க வாய்ப்புள்ள அணி – ஆஃப்கானிஸ்தான்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *