இந்தியாவின் சிறந்த வீரரும் இவர்தான்; மேட்ச் வின்னரும் இவர்தான் - முன்னாள் கேப்டனை புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்! அது சச்சினோ, கோஹ்லியோ இல்லை 1

இந்தியாவின் சிறந்த வீரரும் இவர்தான்; மேட்ச் வின்னரும் இவர்தான் – முன்னாள் கேப்டனை புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்!

இந்திய அணியின் தலைசிறந்த வீரரும், மேட்ச் வின்னரும் இவர்தான் என சூழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்.

இந்திய கிரிக்கெட் அணி சிறந்த பேட்டிங் அணியாக இருந்துவருவதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதாவது, 2000களில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, டிராவிட், லட்சுமணன், யுவராஜ் சிங் போன்ற வீரர்களால் இந்திய அணி பேட்டிங்கில் பலம் பெற்றிருந்தது. இந்த காலகட்டத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி, தவான், ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் என சிறந்த பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது.

இந்தியாவின் சிறந்த வீரரும் இவர்தான்; மேட்ச் வின்னரும் இவர்தான் - முன்னாள் கேப்டனை புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்! அது சச்சினோ, கோஹ்லியோ இல்லை 2

ஆனால், பந்துவீச்சாளர்கள் செயல் இன்றளவும் இருட்டடிக்கப்பட்டதாகவே இருக்கிறது. கும்ப்ளே, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், வெங்கடேஷ் பிரசாத் போன்றவர்கள் முந்தைய காலத்திலும், தற்போது பும்ராஹ், புவனேஸ்வர், இஷாந்த், முகமது சமி, உமேஷ் யாதவ் போன்றோர்கள் இன்றைய காலத்திலும் இந்திய அணிக்கு பவுலிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

இந்தியாவின் சிறந்த வீரரும் இவர்தான்; மேட்ச் வின்னரும் இவர்தான் - முன்னாள் கேப்டனை புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்! அது சச்சினோ, கோஹ்லியோ இல்லை 3

இந்நிலையில், இந்திய அணியில் சிறநத வீரரும் மற்றும் மேட்ச் வின்னரும் இவர்தான் என்றும், அது சச்சின், டிராவிட் இல்லையென்றும் கூறியுள்ளார் சுழல்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். அவர் கூறுகையில்,

“என்னை பொறுத்தமட்டில் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த மேட்ச் வின்னர் அனில் கும்ப்ளே தான். இந்தியாவிற்காக ஆடியதிலேயே மிகச்சிறந்த வீரரும் அவர் தான். அவரது பந்து சுழன்று திரும்பாது என்று பலர் விமர்சித்திருக்கிறார்கள். பந்தை சுழற்றி திருப்பாவிட்டாலும், பேட்ஸ்மேனை அவுட்டாக்க முடியும் என்பதை செய்துகாட்டியவர் அனில் கும்ப்ளே.” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தியாவின் சிறந்த வீரரும் இவர்தான்; மேட்ச் வின்னரும் இவர்தான் - முன்னாள் கேப்டனை புகழ்ந்து தள்ளிய ஹர்பஜன் சிங்! அது சச்சினோ, கோஹ்லியோ இல்லை 4

அனில் கும்ப்ளே, இந்திய அணிக்காக 132 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகளில் ஆடி 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 1999ல் டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி டெஸ்ட் அரங்கில் புதிய வரலாற்று சாதனை படைத்தார் கும்ப்ளே.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *