மிக முக்கிய வீரர்களுக்கே அணியில் இடம் இல்லை; தனது சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங் !! 1

மிக முக்கிய வீரர்களுக்கே அணியில் இடம் இல்லை; தனது சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங்

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் அவர்கள் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகின்றனர். இதற்கிடையில் தங்களின் சிறந்த லெவன் அணியை ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன், முன்னாள்பாகிஸ்தான் வீரர் அப்ரிடி ஆகியோர் வெளியிட்டனர்.

அந்த வரிசையில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது காலத்தில் கிரிக்கெட் விளையாடிய வீரர்களில் இருந்து சிறந்த லெவன் அணியை தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். இதில் சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர்கள் பலரை அவர் தேர்வு செய்துள்ளார். தனது சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் லெவன் அணியை வெளியிட்டுள்ள ஹர்பஜன், டி-20 அணியையும் தேர்வு செய்துள்ளார்.

மிக முக்கிய வீரர்களுக்கே அணியில் இடம் இல்லை; தனது சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங் !! 2
Harbhajan Singh during the ICC Cricket World Cup group stage match at Hampshire Bowl, Southampton. (Photo by Adam Davy/PA Images via Getty Images)

இந்த லெவன் அணியில் துவக்க வீரர்களாக விரேந்திர சேவாக், மாத்யூ ஹேடன் ஆகியோரை தேர்வு செய்துள்ள ஹர்பஜன், இந்தியாவின் தூண் எனப்படும் ராகுல் திராவிட்டை மூன்றாவது வீரராக தேர்வு செய்துள்ளார். மேலும் ஜாம்பவான் சச்சினை நான்காவது வீரராக தேர்வு செய்துள்ளார். தொடர்ந்து தென் ஆப்ரிக்க ஆல் ரவுண்டர் காலிஸை அணியில் இடம் பெறச் செய்துள்ளார்.

தொடர்ந்து இப்பட்டியலில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கை கேப்டனாக தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக இலங்கை வீரர் குமார் சங்ககராவை தேர்வு செய்துள்ளார். பவுலர்கள் இடத்துக்கு ஆஸ்திரேலியாவின் கிளன் மெக்ரா, தென் ஆப்ரிக்காவின் ஷான் போலாக், ஷேன் வார்ன், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் ஆகியோரை அணியில் சேர்த்துள்ளார்.

மிக முக்கிய வீரர்களுக்கே அணியில் இடம் இல்லை; தனது சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் ஹர்பஜன் சிங் !! 3

ஹர்பஜன் லெவன் அணி:

விரேந்திர சேவாக், மாத்யூ ஹேடன், ராகுல் திராவிட், சச்சின், காலிஸ், ரிக்கி பாண்டிங், குமார் சங்ககரா, ஷான் போலாக், ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், கிளன் மெக்ரா.

டி-20 அணி;

டேவிட் வார்னர், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, டிவிலியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், ஆண்ரே ரசல், தோனி, டுவைன் பிராவோ, ஜஸ்பிரீத் பும்ரா, லசித் மலிங்கா, குல்தீப் யாதவ், சுனில் நரைன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *