வாழ்நாள் டெஸ்ட் தொடருக்கான சிறந்த ஆடும் லெவனை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளார்.
இந்த தொடரின் முதல் போட்டியில் டிராவில் முடிந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 3) துவங்க உள்ளது.
மும்பையில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே டெஸ்ட் தொடரையும் வெல்லும் என்பதால் இரு அணிகள் இடையேயான இந்த போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். அதே போல் முதல் போட்டியில் விளையாடாத விராட் கோலி, இந்த போட்டியில் மீண்டும் களமிறங்க உள்ளதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு காரணமாக உள்ளது.

இதன் காரணமாக முன்னாள் வீரர்கள் பலரும் இந்த டெஸ்ட் போட்டி குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர், மேலும் எப்பொழுது டெஸ்ட் தொடர் நடந்தாலும் முன்னாள் வீரர்கள் பலர் வாழ்நாளின் தலைசிறந்த 11 வீரர்கள் என்று தனது ஆடும் லெவனைதேர்வு செய்வார்கள். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் டெஸ்ட் தொடரில் தனது சிறந்த ஆடும் லெவனை தேர்ந்தெடுத்துள்ளார்.
அதில் துவக்க வீரராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் அலெஸ்டர் குக் மற்றும் இந்திய அணியின் ஜாம்பவான் விரேந்தர் சேவாக் ஆகிய இருவரை தேர்ந்தெடுத்துள்ளார், மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் பிரைன் லாரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இரு ஜாம்பவான்கள் தேர்வு செய்துள்ளார்.
குறிப்பாக ஹர்பஜன் சிங் தனது சிறந்த ஆடும் லெவனில் கேப்டனாக ஸ்டீவ் வாக்கை தேர்வு செய்துள்ளார்.

மேலும் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்ககரா தனது அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தேர்ந்தெடுத்துள்ளார், இவர்களை அடுத்து சவுத் ஆப்ரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்கள் ஷேன் வார்னே, கிளன் மெக்ராத் மற்றும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய வீரரை தேர்வு செய்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரமையும் தேர்வு செய்துள்ளார், வாசிம் அக்ரமை குறித்து பேசிய ஹர்பஜன் சிங், வாசிம் அக்ரம் ஒரு தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களை தொடர்ந்து 12 ஆவது வீரராக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரணையும் ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ளார். முத்தையா முரளிதரன் குறித்து பேசிய அவர், ஆசிய கண்டத்தில் முத்தையா முரளிதரன் மிக சிறந்த முறையில் பந்து வீசுவார் என்பதால் ஷேன் வார்னேக்கு பதில் ஆசிய கண்டத்தில் இவரை களமிரக்கலாம் என்று தெரிவித்தார்.
ஹர்பஜன் சிங் தேர்வு செய்துள்ள 12 வீரர்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மட்டும் இன்றும் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்பஜன்சிங் தேர்வு செய்த வாழ்நாள் டெஸ்ட் தொடருக்கான சிறந்த ஆடும் லெவன்
அலிஸ்டர் குக், விரேந்திர சேவாக் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, ஸ்டீவ் வாக் (c), ஜாக்ஸ் காலிஸ், குமார் சங்ககாரா (wk), ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், கிளன் மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன், முத்தையா முரளிதரன்.