டி20 உலககோப்பை தொடரில் இந்த இருவருக்கும் கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்க் திட்டவ்டடம் 1

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஷிகர் தவன் தலைமையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் 42 பந்துகளில் 59 ரன்கள் குவித்து அசத்தினார். அதேசமயம் ஓபனிங் வீரராக விளையாடிய பிரித்வி ஷா 24 பந்துகளில் 43 ரன்கள் குவித்து மிக விரைவாக அதிரடி துவக்த்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது இந்திய தேர்வு குழு நிச்சயமாக இந்த இரு வீரர்களின் பெயரை உலக கோப்பை டி20 தொடரில் மறுக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

டி20 உலககோப்பை தொடரில் இந்த இருவருக்கும் கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்க் திட்டவ்டடம் 2

இந்திய அணியின் வெற்றிக்கு இவர்கள் இருவரும் துணை நிற்பார்கள்

உலகக் கோப்பை டி20 தொடரில் இவர்கள் இருவரும் விளையாடினால் நிச்சயமாக இந்திய அணியின் வெற்றி உறுதியாகும். இவர்கள் இருவரும் மிக அதிரடியாக விளையாடி வருகிறார்கள். இவர்கள் விளையாடிய விதம் நூறாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது போல இருந்தது. அவ்வளவு அனுபவத்தை இந்த இளம் வயதிலேயே வெளிப்படுத்துகிறார்கள். நிச்சயமாக இவர்கள் இருவரும் உலக கோப்பை டி20 வீரர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள்.

ஆட்டத்தின் போக்கை குறைந்த ஓவர்களில் மாற்றி அமைக்கும் திறமை இவர்கள் இருவருக்கும் இருக்கிறது. இவர்கள் இருவரும் இந்திய அணியில் விளையாடினார் நிச்சயமாக மிகக் குறைந்த நேரத்திலேயே மிகப்பெரிய ரன்கள் வந்து சேரும். எனவே இந்திய தேர்வு குழு இவர்கள் இருவரின் பெயரை மறுக்க முடியாது என்று ஹர்பஜன் சிங் தற்போது கூறியிருக்கிறார்.

டி20 உலககோப்பை தொடரில் இந்த இருவருக்கும் கண்டிப்பாக இடம் கொடுக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்க் திட்டவ்டடம் 3

சூரியகுமர் யாதவ் நிச்சயமாக உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாடுவார்

மேலும் பேசிய அவர் நிச்சயமாக சூர்யகுமார் யாதவ் உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணி சார்பாக களமிறங்குவார். இந்த இடத்தில் இறக்கி விட்டாலும் மிக அற்புதமாக சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாடும் திறமை அவரிடம் இருக்கிறது. எனவே அவரது பெயர் தற்போது உறுதியாகி உள்ளது என்றே கூறலாம் என்றும் ஹர்பஜன்சிங் இறுதியாக கூறி முடித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *