ஹர்திக் பாண்டியாவின் தந்தை மறைவு ; ட்விட்டரில் உருக்கமாக பதிவிட்ட ஹர்திக் பாண்டியா !
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆக இருப்பவர் ஹர்திக் பாண்டியா கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்துவிதமான போட்டிகளிலும் இந்திய அணிக்காக ஆடி வந்தார். தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ஆடிக் கொண்டிருக்கிறார். இவர் தனது அதிரடி பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அனைவரையும் கவர்ந்து இருக்கிறார்.

இவரது அதிரடி சிக்ஸர்கள் அடிப்பதை அனைவரும் ரசித்து வருகின்றனர். தற்போது வரை இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகளிலும் 57 ஒருநாள் போட்டிகளிலும் 38 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அது தவிர மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். சர்வதேச அளவில் ஒரு சதமும் 10 அரை சதம் அடித்திருக்கிறார். ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டர் பரோடா வைத்திருப்பவர்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவின் தந்தை கடந்த சனிக்கிழமை காலமாகிவிட்டார். இதன் காரணமாக அவர்களது வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த வருட சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாடி கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது அண்ணன் குர்னல் பாண்டிய ஆகிய இருவரும் பாதியிலேயே வெளியேறி விட்டனர்.

மேலும் நேற்று தனது தந்தைக்கு உருக்கமான ஒரு ட்விட்டர் பதிவினை பதிவு செய்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா அந்தப் பதிவில் “நேற்றைய நாள் தான் உங்களுடைய கடைசி பயணம்; தற்போது அமைதியாக உறக்கம் கொள்ளுங்கள்; இனி தினமும் உங்களை என் மனம் தேடும்” என்று தந்தை மறைவு குறித்து ஹர்திக் பாண்டியா உருக்கமான ட்வீட் செய்துள்ளார்.
My daddy
— hardik pandya (@hardikpandya7) January 17, 2021
As I said to your yesterday
Your last one ride.
Now rest in peace my king
You were a Happy soul!
I will miss you everyday dad
Love you always pic.twitter.com/hUipWOdjxL