இந்தியா-நியூசிலானது இடையேயான முதல் டி20 போட்டி டெல்லி ஃபெரோசா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தரப்பில் ரோகித் 80, தவான் 80 மற்றும் கோலி 26 ரன் அடிக்க 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 202 ரன் குவித்தது இந்திய அணி.
பின்னர் 203 என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலானது அணி சற்று தடுமாற்றத்துடன் கனக்கைத் துவங்கியது. முதல் ஓவரில் ஒரு பவுண்டரி அடித்திருந்தாலும். அடுத்த ஓவரில் சகால் பந்தில் நியூசிலாந்தின் அதிரடி வீரர் கப்டில் தனது விக்கெட்டை இழந்தார்.
2ஆவது ஓவரின் மூன்றாவது பந்தை வீசிய ரிஸ்ட் ஸ்பின்னர் சகால் பந்தை நேராக ஸ்ட்ரெய்ட்டில் அடித்தார் கப்டில். அவர் அடித்த அந்த பந்து அவ்வளவாக உயரம் இல்லாமல் சென்றது.
அவர் அடித்த பந்தை சரியாக சுதாரித்துக் கொண்டு, லாங் ஆஃபில் இருந்து கிட்டத்தட்ட 20 மீட்டர் ஓடி வந்து சரியான நேரத்தில் டைவ் அடித்து பந்தினை அந்தரத்தில் பறக்க பறக்க பிடித்தார் ஹர்திக் பாண்டியா.
அந்த வீடியோ காட்சி கீழே :
https://twitter.com/84107010ghwj/status/925745972872974337